லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!

Woman Anesthetizes Old Couple | குஜராத்தில் வீட்டு வேலை வேண்டும் என கூறி முதியவர்கள் இருந்த வீட்டிற்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்த நிலையில், அவர்களுக்கு மயக்க மருத்து கொடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து முதியவர் கொலை.. நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்!

கைது செய்யப்பட்ட பெண்

Updated On: 

26 Apr 2026 00:14 AM

 IST

காந்திநகர், ஏப்ரல் 25 : குஜராத் (Gujarat) மாநிலம், அகமதாபத் (Ahmedabad) பகுதியில் உள்ள தரியாபூர் பகிதியை சேர்ந்தவர் 81 வயதான அப்துல்பாய் இஸ்மாயில். இவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அப்துல்பாய் வீட்டிற்கு லதாபென் என்ற 55 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். அவர், முதியவரிடம் தனக்கு வேலை வேண்டும் என்றும் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.

லஸ்ஸியில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண்

அந்த பெண்ணை நம்பிய முதியவர் அவரை வீட்டு வேலை செய்ய அனுமதித்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண், வேலை செய்வதை போல நடித்துள்ளார். இந்த நிலையில், முதியவர்கள் இருவருக்கும் அவர் லஸ்ஸி போட்டு கொடுத்துள்ளார். அதில் அவர் மயக்க மருந்தை கலந்துள்ளார். இதன் காரணமாக லஸ்ஸியை குடித்த முதியவர் மற்றும் அவரது மனைவி என இருவரும் மயக்கமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : பாஜகவில் இணையும் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா.. வெளியான பரபரப்பு தகவல்

பணம், நகைகளை திருடிச் சென்ற பெண்

இந்த நிலையில், வீட்டில் இருந்த பணம், நகைகளை அந்த பெண் திருடிச் சென்றுள்ளார். மயக்கமடைந்து கிடந்த முதியவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே உடல்நல சிக்கல்களில் இருந்த முதியவர் அப்துல்லா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : ஹூக்ளி நதிக்கரையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பயணம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

சிசிடிவி மூலம் குற்றவாளியை கைது செய்த பெண்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை கையில் எடுத்துள்ளனர். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் லதாபென்னை அவர்கள் கைது செய்துள்ளனர். அந்த பெண் மீது ஏற்கனவே திருட்டு, சூதாட்டம் தொடர்பான பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதை தெரிந்து போலீசார் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்