இந்தியாவின் எதிர்காலத்தை திட்டமிடும் முக்கிய சிந்தனை நபர்கள், வணிக தலைவர்கள் மற்றும் கொள்கை அமைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் டிவி9 நெட்வொர்க்கின் What India Thinks Today Summit 2026 (WITT) இந்த ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது. மார்ச் 23 மற்றும் 24. 2026 ஆகிய 2 நாட்கள் புதுடெல்லியில் நடைபெறும் இந்த மாநாடு, இந்தியா மற்றும் உலகம் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பல முக்கிய விவாதங்களை நடத்துகிறது. இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார். டிவி9 நெட்வொர்க்கின் இந்த முக்கிய நிகழ்ச்சியில் அவர் மூன்றாவது முறையாக கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வளர்ச்சி குறித்து நடைபெறவிருக்கும் விவாதம்
இந்த மாநாட்டில், இந்தியாவின் வளர்ச்சி பாதையை நிர்ணயிக்கும் பல்வேறு துறைகளின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ‘ மேலும் Values Vs Valuation Building The Business Case என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்வில், தொழில்முனைவோர் உலகில் மதிப்புகள் மற்றும் லாபம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் TiE Delhi NCR என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உபாசனா ஷர்மா, கேபிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அர்பனா ஷாஹி, ஸ்கே ஏர் மொபிலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ அங்கித் குமார், ஃபண்டமென்டம் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் இணை நிறுவனர் அஷிஷ் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், Energy Conundrum India’s Way Out என்ற முக்கிய அமர்வு, உலகளவில் எதிர்கொள்ளப்படும் ஆற்றல் சவால்கள் மற்றும் இந்தியாவின் தீர்வுகளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. டெரி என்ற அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் விபா தவான், ஏஎம் கிரீன் நிறுவனத்தின் சிடிஓ டாக்டர் எஸ்.எஸ்.வி. ராமகுமார் உள்ளிட்ட பல நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள விருக்கின்றனர்.
மேலும், The Green Pivot மற்றும் ‘The Sustainability Imperative’ போன்ற அமர்வுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த மாநாடு, வணிக வளர்ச்சி மற்றும் உலக அளவிலான பொறுப்பு ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தளமாக அமைகிறது. பல்வேறு துறைகளில் இருந்து வரும் நிபுணர்கள், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் எதிர்கால திசை குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். மொத்தத்தில், ‘What India Thinks Today Summit 2026’ இந்தியாவின் வளர்ச்சி, புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சிந்தனை மேடையாக உருவெடுத்துள்ளது. இந்த மாநாடு, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய பாதையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.