பிரதமர் மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன்..
C.P. Radhakrishnan Meets PM Modi: இந்திய நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9, 2025 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்த சி.பி ராதாகிருஷ்ணன்
டெல்லி, ஆகஸ்ட் 18, 2025: பிரதமர் நரேந்திர மோடியை ஆகஸ்ட் 18 2025 தேதியான இன்று மகாராஷ்டிரா ஆளுநரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருமான சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது. இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகஸ்ட் 17 2025 அன்று அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி சி.பி ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
இந்திய நாட்டின் 15 வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9 2025 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சி.பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் அரசியல் கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அழைத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார். அதே சமயம் இந்திய கூட்டணி தரப்பில் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை இதன் காரணமாக அவரது நிலைப்பாடுகள் குறித்தும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்தித்த சி.பி ராதாகிருஷ்ணன்:
Met Thiru CP Radhakrishnan Ji. Conveyed my best wishes on his being the NDA’s Vice Presidential nominee. His long years of public service and experience across domains will greatly enrich our nation. May he continue to serve the nation with the same dedication and resolve he has… pic.twitter.com/5vjFzzwUqn
— Narendra Modi (@narendramodi) August 18, 2025
இது போன்ற சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சி.பி ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். இது தொடர்பான அவரது வலைதள பதிவில், “ சி.பி ராதாகிருஷ்ணன் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
அவரது நீண்ட கால பொது சேவை மற்றும் கள அனுபவம் நமது நாட்டை பெரிதும் வளப்படுத்தும் அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் தொடர்ந்து நம் தேசத்திற்கு சேவை செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்