Uttar Pradesh : உ.பியில் கொட்டித் தீர்த்த கனமழை.. ஒரே நாளில் 34 பேர் பலியான சோகம்!

Uttar Pradesh Hailstorm and Heavy Rain | கோடை வெப்பம் தணிந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் அங்கு ஒரே நாளில் 34 நேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Uttar Pradesh : உ.பியில் கொட்டித் தீர்த்த கனமழை.. ஒரே நாளில் 34 பேர் பலியான சோகம்!

மழை பாதிப்பு

Published: 

23 May 2025 08:41 AM

உத்தர பிரதேசம், மே 23 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) புழுதி புயலுடன் ஆலங்கட்டி (Hail Storm) மழை பெய்த நிலையில், ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்ட இந்த தீடீர் வானிலை மாற்றம் காரணமாக அங்கு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வட மாநில பகுதிகளில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் அது ஏற்படுத்திய கடும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

வட மாநிலங்களில் திடீரென மாறிய வானிலை – பெரும் சேதம்

மே மாதம் தொடங்கியது முதலில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்து சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தனது சற்று குளிர்ச்சியான சூழ்நிலவுகிறது. இந்த நிலையில் டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்க பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையில் இருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திடீர் வானிலை மாற்றம் காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிப்பு

டெல்லியில் நிலவி வரும் இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட கிண்டிகோ விமானத்தின் முன் பகுதி ஆலங்கட்டி மழை யால் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல டெல்லி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து 12 விமானங்கள் ஜெய்பூருக்கும் ஒரு சர்வதேச விமான மும்பைக்கும் திருப்பி விடப்பட்டது.

கனமழை – உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு

உத்திரபிரதேசத்தில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்ட நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக அங்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி கட்டட சேதம், மரம் விழுந்தது, சாலைகள் பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் உத்திர பிரதேசம் எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.