அக்ஷர்தாம் ஆசிரமத்தில் கோலாகலமான ஹோலி கொண்டாட்டம்.. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பங்கேற்பு..

டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் ஆசிரமத்திலும் ஹோலி விழா சிறப்பாக நடைபெற்றது. ஹோலி நாளன்று அக்ஷர்தாம் ஆலயத்தை அமெரிக்க பிரதிநிதி குழு பார்வையிட்டது. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் கிரிஸ்டோபர் லாண்டோ, அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஆகியோர் புதன்கிழமை, மார்ச் 4 அன்று நியூ டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் ஆலயத்தை பார்வையிட்டனர்.

அக்ஷர்தாம் ஆசிரமத்தில் கோலாகலமான ஹோலி கொண்டாட்டம்.. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பங்கேற்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

04 Mar 2026 21:26 PM

 IST

மார்ச் 4, 2026: வண்ணங்களின் திருவிழா ஹோலி… கலர்ஃபுல் கொண்டாட்டங்களுக்கு முகவரியாக விளங்கும் பண்டிகை. வசந்த காலத்தில் வரும் ஹோலி பண்டிகை, தீமையை வென்று நன்மை பெற்ற வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் இதில் கலந்து கொள்கிறார்கள். ஒருவர்மேல் ஒருவர் வண்ணங்களைத் தூவி உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். நாடு முழுவதும் ஹோலி விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஹோலி விழாவில் அமெரிக்க தூதர் பங்கேற்பு:

அதேபோல், டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் ஆசிரமத்திலும் ஹோலி விழா சிறப்பாக நடைபெற்றது. ஹோலி நாளன்று அக்ஷர்தாம் ஆலயத்தை அமெரிக்க பிரதிநிதி குழு பார்வையிட்டது. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் கிரிஸ்டோபர் லாண்டோ, அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஆகியோர் புதன்கிழமை, மார்ச் 4 அன்று நியூ டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் ஆலயத்தை பார்வையிட்டனர்.

சுவாமிநாராயண் அக்ஷர்தாமிற்கு முக்கிய தலைவர்களை வரவேற்பது பெருமையாக இருப்பதாக குருஜி மஹந்த் சுவாமி மகாராஜ் தெரிவித்தார். இது இந்தியாவின் ஆன்மிக ஞானம், பண்பாட்டு பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் அமைதி போன்ற பொதுவான மதிப்புகளை பிரதிபலிப்பதாக கூறினார். அனைவருக்கும் மகிழ்ச்சியான, உற்சாகமான ஹோலி நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இத்தகைய பிரதிநிதிகள் வருகை தருவது நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

இது ஹோலி பண்டிகைக்கு சரியான முதல் பயண இடமாகும்; இந்த அற்புதமான ஆலயம் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தையும் நிலையான மதிப்புகளையும் வெளிப்படுத்துகிறது என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். மேலும், அக்ஷர்தாம் குழுவினருக்கு ஹோலி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

Follow Us
Related Stories
பெங்களூரில் மருத்துவமனைகளின் சுற்றுசுவர் இடிந்து விபத்து.. 7 பேர் பரிதாப பலி!
மேற்குவங்க தேர்தல்.. வாக்கு இயந்திரங்களில் முறைகேடு? பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல்
“பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை!”.. பசுமைப் புரட்சியை நோக்கி நிதின் கட்கரி அதிரடி!!
தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம்
வங்கியில் துப்பாக்கி உடன் நுழைந்த கும்பல்.. ரூ.50 லட்சத்தை கொள்ளை அடித்ததால் பரபரப்பு!
வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்.. மத்திய சுகாதார துறை வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..