ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலம் வந்த இரண்டு மாப்பிள்ளைகள்..உபியில் ஷாக் சம்பவம்!
Two Groom Came To Marry A Bride In Uttar Pradesh | உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், மாப்பிள்ளை ஊர்வலத்திற்காக அனைவரும் காத்திருந்த நிலையில், ஒரு மாப்பிள்ளைக்கு பதிலாக இரண்டு மாப்பிளைகள் அந்த இடத்திற்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மாதிரி புகைப்படம்
லக்னோ, ஏப்ரல் 16 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அவரது குடுமத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி திருமணத்தன்று, திட்டமிட்டபடி திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துக்கொண்டு இருந்துள்ளனர். அந்த குடும்பத்தின் பாரம்பரியத்தின் படி திருமணத்திற்கு, மாப்பிள்ளை வீட்டார் மணமகனை குதிரை மீது அமர வைத்து ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வருவர். அப்படி நடைபெற்ற மாப்பிள்ளை ஊர்வலத்தில் தான் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலம் வந்த இரண்டு மாப்பிள்ளைகள்
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில் மாப்பிள்ளையின் வருகைக்காக அனைவரும் காத்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ஒரு மாப்பிள்ளைக்கு பதிலாக இரண்டு மாப்பிள்ளைகள் குதிரை ஊர்வலத்தில் மணமேடைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குதிரையில் வந்த இரண்டு மாப்பிள்ளைகளின் தரப்பில் இருந்து எங்கள் மாப்பிள்ளைக்கு தான் உங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. 850 தொகுதிகளாக உயரும் மக்களவை?.. 3 முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல்!
விசாரணையில் தெரிய வந்த பின்னணி
இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவதாம் சண்டையாக மாறியுள்ளது. இந்த நிலையில், பெண் வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் அந்த குழப்பத்திற்கு காரணம் என்னவென்று தெரிய வந்துள்ளது. அதாவது, அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்த உறவுக்கார நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண் வீட்டார் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பார்ப்பது எப்படி?
இந்த நிலையில் அவர்கள் சம்பல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தங்களது மகளை திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். அந்த நபருடன் இளம் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் பெண் வீட்டார் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் இரண்டு மாப்பிள்ளைகளும் மணமேடைக்கு வந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் தலையிடலால் திருமணம் ரத்து செய்யப்பட்ட குழுவினர் கிளம்பிய நிலையில், இரண்டாவதாக நிச்சயம் செய்யப்பட்ட மணமகன் உடன் இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.