பெங்களூரில் வீடு புகுந்து கேஸ் சிலிண்டர் திருட்டு.. அதிர்ச்சி சம்பவம்!

Two Gas Cylinders Stole In Bengaluru Household | இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், பெங்களூரில் வீடு புகுந்து கேஸ் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வீடு புகுந்து கேஸ் சிலிண்டர் திருட்டு.. அதிர்ச்சி சம்பவம்!

திருடப்பட்ட கேஸ் சிலிண்டர்

Updated On: 

21 Mar 2026 23:43 PM

 IST

பெங்களூரு, மார்ச் 21 : மத்திய கிழக்கில் (Middle East) நிலவி வரும் மோதல் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சிக்கலுக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், பெங்களூரில் வீடு புகுந்து சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வீடு புகுந்து சிலிண்டர் திருடப்பட்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு

பெங்களூரில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 25,000 ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தினசரி உணவுக்காக ஓட்டல்களை நம்பியுள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதேபோல ஓட்டல் தொழிலை நம்பியுள்ளவர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரில் வீடு புகுந்து சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : வீட்டில் சிலிண்டர் இல்லாமல் சமையல்.. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் சேமிப்பு.. கேரளாவில் விசித்திரமான நிகழ்வு… முழு தகவல் உள்ளே!

பெங்களூரில் வீடு புகுந்து கேஸ் சிலிண்டர் திருட்டு

நேற்று (மார்ச் 20, 2026) உகாதி கொண்டாட்டத்தில் பொதுமக்கள் இருந்த நிலையில், இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஹெல்மெட் அணிந்த இரண்டு பேர் ஒரே ஸ்கூட்டரில் ஒரு வீட்டின் முன்பு நின்றுக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நபர் வீட்டிற்கு வெளியே நிற்க மற்றொரு நபர் ஸ்கூட்டர் உடன் வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே செல்கிறார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து இரண்டு சிலிண்டர்கள் உடன் அவர் வெளியேறுகிறார். பின்னர் ஸ்கூட்டரில் இருந்து அவர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்கிறார்.

இதையும் படிங்க : பெண் குழந்தை பிறந்த ‘பாவம்’: இரட்டை கொலையில் முடிந்த வரதட்சணை சண்டை

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார்

பெங்களூருவில் பேகூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பெங்களூரில் கடும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடு புகுந்து கேஸ் சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்