Lunar Eclipse: இன்று சந்திர கிரகணம்.. எந்த நேரத்தில் காணலாம் தெரியுமா?

2025 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 அன்று நிகழ்கிறது. இரத்த நிலவு என அழைக்கப்படும் இந்த கிரகணம், சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும். ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகளில் தெரியும். இதனை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம்.

Lunar Eclipse: இன்று சந்திர கிரகணம்.. எந்த நேரத்தில் காணலாம் தெரியுமா?

சந்திர கிரகணம்

Published: 

07 Sep 2025 07:41 AM

 IST

இந்தியா, செப்டம்பர் 7: 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 7) இரவு நிகழவிருப்பதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாகவே வானியல் நிகழ்வுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதேசமயம் ஆண்டுக்கு குறிப்பிட்ட சில மாத இடைவெளிகளில் நிகழும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என சொல்லப்படுகிறது. இதில் சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும்போது அதன் நிழல் சந்திரனை மறைப்பதால் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் இரத்த நிலவு என அழைக்கப்படுகிறது. சுமார் 82 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

85% பேருக்கு சந்திர கிரகணம் தெரியும்

சிவப்பு-ஆரஞ்சு நிறங்களின் கலவையில் தெரியும் இந்த சந்திர கிரகணத்தை உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85% பேர் ஒரு பகுதியையாவது காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் முழுமையாக தெரியும் என்றும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகள் பகுதியளவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read:  சந்திர கிரகணம்.. இந்த பொருட்களை தானம் செய்தால் நல்லது!

சந்திர கிரகண நேரம்

சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், இந்த சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்ணால் காணலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 8.58 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. இரவு 11 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை 12.22 மணி வரை முழு கிரகணம் இருக்கும். அதிகாலை 2.25 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.

இரவு 8.58க்கு பூமியின் பெனும்பிரல் நிழல் சந்திரனின் மேற்பரப்பைத் தொடத் தொடங்கும். இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழல் சந்திரனுக்குள் நுழையத் தொடங்கி, படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் காணலாம். இரவு 11 மணிக்கு முழு கிரகணம் தொடங்குவதால் சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மூழ்கும். இதனால் முற்றிலும் சிவப்பு நிறமாக மாறியிருக்கும்.

இரவு 11.41 மணிக்கு பூமியின் நிழலின் மையத்திற்கு சந்திரன் மிக அருகில் இருக்கும் தருணத்தைப் பார்க்கலாம். அதிகாலை 12.22க்குப் பின் பூமியின் நிழலில் இருந்து சந்திரன் நகரத் தொடங்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் அனைத்தும் இந்த கிரகணத்தின் முழு காட்சியையும் காணலாம்.

Also Read: Lunar Eclipse 2025: செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்.. என்ன செய்யக்கூடாது தெரியுமா?

சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் மாறும் போது சில நேரங்களில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மாறுபடலாம். சந்திர கிரகணத்தின் போது சந்திரனை நெருக்கமாகப் பார்க்க, தொலைநோக்கியை பயன்படுத்தலாம். அதேபோல் உங்கள் ஊரில் உள்ள அறிவியல் மையம், கோளரங்கள் ஆகியவையும் இன்று சந்திர கிரகணம் காண இலவச அனுமதியை வழங்கும் என்பதால் அங்கு சென்றும் பார்க்கலாம்.