‘எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது… குழந்தையைப் பார்த்துக்கோங்க..’ – தற்கொலை செய்துகொண்ட பெண்
Tragic Incident : தெலங்கானா மாநிலத்தில் எறும்புகள் மீதான பயத்தால் திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை கடிதத்தில் அந்தப் பெண், எறும்புகளுடன் இனி வாழ முடியாது எனவும் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை செய்து கொண்ட மனீஷா
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த ஒரு சோக சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எறும்பு பயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு திருமணமான பெண் வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Suicide) செய்து கொண்டார். மாலையில் அவரது கணவர் வீடு திரும்பியபோது, வீட்டில் தனது மனைவி இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். தகவல் கிடைத்த போலீசார் (Police) வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எறும்பு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட பெண்
எறும்பு பயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு திருமணமான பெண், தன் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடிதத்தின் படி, எறும்பு பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க : சென்னையில் ரூ.2.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பெண் குழந்தை.. 6 பேர் அதிரடி கைது!
காவல்துறையினரின் கூற்றுப்படி, தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள ஷர்வா ஹோம்ஸில் ஸ்ரீகாந்த் மற்றும் மனிஷா (25) என்ற தம்பதியினர் தங்கள் மகளுடன் வசித்து வருகின்றனர். இருப்பினும், மனிஷா சில காலமாக எறும்புகளை பார்த்தால் பயம் ஏற்படும் மைர்மெகோபோபியா என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த பிரச்னையை தீர்க்க, மனிஷாவின் குடும்பத்தினர் அவரை பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு பல இடங்களில் சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை.
‘எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது’
இதனால் மிகவும் மனமுடைந்த மனிஷா கடந்த நவம்பர் 4, 2025 அன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் அவரது கணவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, படுக்கையறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கவனித்து, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்றபோது, அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவி தூக்கில் தொங்குவதைப் பார்த்த அவர், கதறி அழுதார்.
இதையும் படிக்க : ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட சக பயணி.. பகீர் சம்பவம்!
அங்குள்ள மக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைப் பரிசோதித்தனர். உடலுக்கு அருகில் இருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் குறிப்பில், “ஸ்ரீ.. மன்னிக்கவும்.. இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. அன்வியை கவனித்துக் கொள்ளுங்கள்.. ” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)