நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த முக்கிய கோரிக்கை!

Thangam Thennarasu Meets Nirmala Sitharaman : டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரி, அவர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, கனிமொழி எம்.பி உடன் இருந்தார்.

நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு..  அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த முக்கிய கோரிக்கை!

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு

Updated On: 

19 Aug 2025 16:54 PM

டெல்லி, ஆகஸ்ட் 19 : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman), தமிழக நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு (Minister Thangam Thennarasu), கனிமொழி எம்.பி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். தமிழகத்தில் வழங்கிய வேண்டிய நபார்டு நதியை விரைவில் வழங்க கோரி தங்கம் தென்னரசு நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளார்ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த மாநாடு டெல்லியில் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பரிந்துரைகளை எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தங்கம் தென்னரசு 202 5 ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது, இவருக்கு எம்.பி கனிமொழியும் உடன் இருந்தார். அதில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை விடுவிக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளார். மத்திய அரசு ஜிஎஸ்டி வரி முறையை 2017ல் கொண்டு வந்தது. இதனால், அனைத்து பொட்களுக்கு மீதும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.

Also Read : தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து கனிமொழி கேள்வி!

2  நாட்கள் ஆலோசனை கூட்டம்

இதனால் மக்கள் அந்த பொருட்களின் விலையோடு, ஜிஎஸ்டி வரியும் சேர்த்து செலுத்தி வருகின்றனர். பெரும்பாலான பொரூட்களுக்கும் நான்கு அடுக்குகளில் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 5,12,18,29 என்ற சதவீதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதில், 12, 28 சதவீதங்களை நீக்கிவிட்டு, 5,18 சதவீத வரிகளை மட்டும் தொடர்ந்து கடைபிடிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதனால், 12,28 சதவீத வரம்பிற்குள் உள்ள பொருட்கள் 5 மற்றும் 18 சதவீதத்திற்குள் கொண்டு வரும் பட்சத்தில் பெரும்பாலான பொருட்களின் விலைகளும் குறையலாம். தற்போது ஏசி, டிவி, கணினி, வாசிங்மெஷின், கார், பைக் போன்றவை 28 சதவீத வரி வரம்பிற்குள் உள்ளன. இவை பெரும்பாலும் 18 சதவீதத்திற்குள் மாற்றப்படலாம்.

Also Read ; துணை குடியரசுத் தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

மேலும், குடிநீர், துணிகள், சமையல் அறை சாமான்கள், சிற்பங்கள் உள்ளிட்டவறை 12 சதவீத வரி விதிப்பில் உள்ளன. இவை 5 சதவீத வரம்பிற்குள் கொண்டு வரப்படலாம். இதனால், இந்த பொருட்களின் விலையும் குறையலாம். இதைத்தான், பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் கூறினார். தீபாவளிக்கு இரண்டு பரிசுகள் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி (நாளை) முதல் இரண்டு நாட்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இதற்கிடையில் தான், அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.