தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. பொதுஇடங்களில் உணவளிக்க தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

Supreme Court On Stray Dogs : தெரு நாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், தெருக்களில் நாய்களுக்கு உணவு வழங்கவும் தடை விதித்துள்ளது.

தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. பொதுஇடங்களில் உணவளிக்க தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

உச்ச நீதிமன்றம்

Updated On: 

22 Aug 2025 11:36 AM

டெல்லி, ஆகஸ்ட் 22 : தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் (Supreme court) உத்தரவிட்டுள்ளது. தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இந்த நிலையில், அந்த உத்தரவை தற்போது உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நாடு முழுவதும் தெருநாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர்.  தெருநாய்களை கட்டுப்படுத்த  வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் தெருநாய்கள்  கடியால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனை கவனித்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.  2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது.

காப்பகங்களில் சிசிடிவி, போதுமான ஊழியர்கள், உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.  நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.  இந்த நிலையில்,  இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் , சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Also Read : தேர்வு எழுத சென்ற பெண்.. அழுத குழந்தை.. தாய்ப்பால் கொடுத்த பெண் காவலர்!

உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அப்போது, தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது, கருத்தடை ஊசி செலுத்தப்பட்ட பிறகு, நாய்களை மீண்டும் அதே தெருவில் விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்ரோஷமான நாய்கள் மற்றும் ரேபிஸ் உள்ள நாய்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Also Read : துணை ஜனாதிபதி தேர்தல்.. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த ராகுல் காந்தி!

ரேபிஸ் பாதிக்கப்படாத நாய்களை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது அனுமதிக்கப்படாது என்றும், உணவளிப்பதற்காக பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் நீதிமன்றம் கூறியுள்ளதுஉயர் நீதிமன்றங்களில் உள்ள தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் தலைமை செயலாளர்கள் பதில் அளிக்கவும், தெருநாய்கள் பிரச்னையை எதிர்கொள்ள தேசிய அளவில் கொள்கை வகுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.