எஸ்எஸ்சி 13-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு…67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தக் கட்டத்துக்கு தகுதி!

SSC 13th Phase Exam Result: பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட எஸ்எஸ்சி 13- ஆம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடுத்தக் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது தொடர்பான முடிவுகளை இணையதளத்தில் அறியலாம்.

எஸ்எஸ்சி 13-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு...67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தக் கட்டத்துக்கு தகுதி!

எஸ்எஸ்சி 13 ஆம் கட்ட தேர்வு முடிவு வெளியீடு

Published: 

06 Feb 2026 12:39 PM

 IST

பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் கடந்த 2025- ஆம் ஆண்டு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள், அரசு அலுவலகங்களில் மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை (10-12-ஆம் வகுப்பு), பட்டப்படிப்பு நிலை பதவிகளுக்கான பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது. கணினி அடிப்படையில் நடைபெற்ற தேர்வின் (13-ஆம் கட்டம்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மெட்ரிகுலேஷன், மேல்நிலை பள்ளி மற்றும் பட்டப்படிப்பு என மொத்தம் 67,543 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட ஆள்சேர்ப்பு செயல்முறைக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், கூடுதலாக கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மெட்ரிகுலேஷன் நிலை பதவிகளுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு கடந்த ஜூலை 24- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பதவிகளுக்கு 1,209,332 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள்

இதில், 17,720 விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேல்நிலைப்பள்ளி நிலை தேர்வு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. கூடுதலாக ஆகஸ்ட் 29- ஆம் தேதி ஒரு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதவிகளுக்கு 7,08,219 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 14,768 பெயர் கணினி வழி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளுக்கு 1,021,850 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அதில், 35,055 பேர் அடுத்த கட்ட ஆள் சேர்ப்பு நிலைக்கு தகுதி பெற்றனர்.

மேலும் படிக்க: மேகாலயா சுரங்க வெடிவிபத்து.. பிப்.9 ஆம் தேதி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

எஸ்எஸ்சி 13 -ஆம் கட்ட தேர்வுக்கு கட் ஆஃப் மதிப்பெண்

மொத்தத்தில் 67,543 பெயர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மெட்ரிகுலேஷன் தரத்தில் 46 பேர், மேல்நிலைப்பள்ளி அளவில் 29 பேர் மற்றும் பட்டப் படிப்பு அளவில் 58 பேர் என பல்வேறு வேட்பாளர்களின் முடிவுகளை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. எஸ் எஸ் சி 13-ஆம் கட்ட தேர்வு கல்வி நிலைகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது.மெட்ரிகுலேஷன் நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாகவை அளிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் சில முக்கிய பதவிகளுக்கு கடும் போட்டி நிலவியது.

எஸ்எஸ்சி தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம்.

எஸ்எஸ்சி 13- ஆம் கட்ட தேர்வுக்கு பிறகு கணினி வழி தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்தல் முடிவுகளை சரி பார்ப்பதற்கு, அதிகாரப்பூர்வ இணையதளமான WWW.SSC.GOV.IN- இல் தேவையான சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். பின்னர், தேர்வு முடிவுகள் என்ற பகுதிக்கு சென்று எஸ் எஸ் சி 13- ஆம் கட்ட தேர்வு 2025 முடிவுகளுக்கான இணைப்பை கிளிக் செய்து தேர்வு முடிவுகளை பிடிஎப் ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மனப் பயிற்சி, சமநிலை மற்றும் அறிவே வெற்றிக்கான விசை: ‘பரீட்சா பே சர்ச்சா’வில் பிரதமர் மோடி

Related Stories
தர்பூசணிகள் நிறைந்த லாரியில் வெடிபொருட்கள்! பாலக்காட்டில் நடந்த சம்பவம்
ஆன்லைன் கேமால் பறிபோன 3 சிறுமிகளின் உயிர் - தற்கொலை கடிதத்தால் அதிர்ச்சி
ஸ்ருதி ஹாசனால் தான் எங்கள் மகள் உயிரோடிருக்கிறார்... - சிறுமியின் பெற்றோர் உருக்கம்
அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து