இமாச்சல பிரசேதத்தில் அதிர்ச்சி.. நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

Himachal Pradesh Landslide : இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, நிலச்சரிவில் சிக்கி விபத்து ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கிய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இமாச்சல பிரசேதத்தில் அதிர்ச்சி.. நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு

Updated On: 

08 Oct 2025 08:02 AM

 IST

இமாச்சல பிரசேதம், அக்டோபர் 08 :  இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, நிலச்சரிவில் சிக்கியது. இதில் பயணித்த 15 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது.  அப்போது அவ்வழியில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த சுற்றுலா பேருந்து நிலச்சரிவில் சிக்கி விபத்து ஏற்பட்டது. ஜான்டுட்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாலுகாட் பகுதியில் உள்ள பல்லு பாலம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பேருந்தில் 35 பேர் பயணம் மேற்கொண்டனர். நிலச்சரிவில் பேருந்து சிக்கியது குறித்து உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவ்ல கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் விரைந்தனர். ஜேசிபி மூலம் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து வெளியே எடுத்தனர்.

Also Read : இனி புக் செய்த ரயில் டிக்கெட்டில் தேதியை மாற்றம் செய்யலாம்.. ஆனால் சில் Conditions!

நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு


மேலும், அதில் இருந்த பயணிகளை  வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : அரசு மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து.. 6 பேர் பலி

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். மேலும், “இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.