கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. உயிருக்கு போராடும் 6 பேர்.. பஞ்சாபில் அதிர்ச்சி!

punjab hooch tragedy : பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களாக மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்ததால், 14 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு..  உயிருக்கு போராடும் 6 பேர்.. பஞ்சாபில் அதிர்ச்சி!

மாதிரிப்படம்

Updated On: 

13 May 2025 14:32 PM

 IST

பஞ்சாப், மே 13 : பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 6க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு உயிருக்கு போராடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மஜிதா கிராமத்தில் 2025 மே 12ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். புல்லர், டாங்ரா மற்றும் சாந்தா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்துள்ளனர்.  இறந்தவர்களில் பெரும்பாலோர் கிராமங்களில் கூலி வேலை செய்து வந்தவர்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு பஞ்சாப் காவல்துறை கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு

அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பிரப்ஜித் சிங் என்பவர் 50 லிட்டர் மெத்தனாலை கலந்து இரண்டு லிட்டர் பாக்கெட்களில் கள்ளச்சாராயத்தை அங்கிருக்கும் மக்களுக்கு விற்பனை செய்துள்ளார். 2025 மே 12ஆம் தேதியான இரவு முதல் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நிலை மோசம் அடைந்தது.

இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிசிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய ஐந்து கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், ” மஜிதாவில் ஒரு துரதிர்ஷ்டவசமான சோகம் நடந்துள்ளது.

நேற்று இரவு 5 கிராமங்களில் இருந்து மது அருந்தியவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் எங்கள் மருத்துவக் குழுக்களுடன் விரைந்தோம். 14 பேர் உயிரிழந்தனர்.  இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

பஞ்சாபில் அதிர்ச்சி


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கள்ளச்சாராயம் உயிரிழப்பு பற்றி தகவல் கிடைத்தவுடன் நாங்கள் மருத்துவ குழுக்களை நியமித்தோம். எங்கள் குழுக்கள் வீடு வீடாகச் சென்று வருகின்றன. அதை உட்கொண்டவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். உயிரிழந்தவர்கள் கடந்த இரு நாட்களாக கள்ளச்சாராயத்தை குடித்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்