டிகிரி முடித்தவரா? எஸ்பிஐ வங்கியில் 6,589 காலிப் பணியிடங்கள்.. எப்படி அப்ளை பண்ணலாம்?

SBI Clerk Recruitment 2025 : நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் 6,589 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவரா? எஸ்பிஐ வங்கியில் 6,589 காலிப் பணியிடங்கள்.. எப்படி அப்ளை பண்ணலாம்?

எஸ்பிஐ வங்கி

Updated On: 

07 Aug 2025 16:20 PM

 IST

சென்னை, ஆகஸ்ட் 07 : எஸ்பிஐ வங்கியில் 6,589 காலிப் பணியிடங்கள் இருப்பதாக (SBI Clerk Recruitment) அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் 380 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு விண்ணப்பிக்கலாம் என வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. வங்கி வேலைக்காக பலரும் ஆண்டுதோறும் காத்திருந்து தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் 6,589 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான நேற்று முதல் விண்ணப்பம் தொடங்கி உள்ளதுஎஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் கிளார்க் பணிக்கு மொத்தம் 6,589 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 380 பணியிடங்களும், கர்நாடகாவில் 270 பணியிடங்களும், கேரளாவில் 247 பணியிடங்கள் என மொத்தம் 5,180 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிரப்பப்படாத பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,589 இடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI.. விரைவில் மாநிலம் முழுவதும் அமல்!

கல்வித்தகுதி

மேற்கெண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். 2025 டிசம்பர் 31-ன் படி, டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயது விவரம்

மேற்கண்ட பணிக்கு 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997 ஏப்ரல் 2 முதல் 2005 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு இடையில் பிறந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் வயது வரம்பிலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 31 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள். முதல்நிலை தேர்வு செப்டம்பர் மாதத்திலும், மெயின் தேர்வு 2025 நவம்பர் மாதத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : UPI : யுபிஐ-ல் பயோமெட்ரிக் மூலம் பண பரிவர்த்தனை?.. விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்?

விண்ணப்பிப்பது எப்படி

எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2025 ஆகஸ்ட் 28ஆம் தேதியாகும்.  விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.