முதலமைச்சராகும் விஜய்.. ஒடிசாவில் மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்த கலைஞர்!
Sand Sculpture to Support CM Vijay | 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை பெற்று கூட்டணி அமைத்து, கட்சிகள் இடம் ஆதரவு பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஆதரவு தெரிவித்து மணல் சிற்பம்
பூரி, மே 10 : தமிழகத்தின் (Tamil Nadu) 17வது முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய்க்கு, ஒடிசாவில் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒடிசாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் இதனை செய்துள்ளார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு ஒடிசாவில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம்
2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 04, 2026 அன்று வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை படைத்தது. பல ஆண்டுகளாக தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளாக வளம் வந்த திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி சுமார் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், தவெக உள்ள எந்த கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறி விட்ட நிலையில், தொங்கு சட்டசபை ஏற்பட்டது.
இதையும் படிங்க : “விஜய் என்னும் ஆளுமை”.. இயக்கமாக தொடங்கி முதலமைச்சர் மகுடம் வரை.. ஒரு ரீவைண்ட்!
இந்த நிலையில் தான் ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் பணியை தவெக கையில் எடுத்தது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றது.
இதையும் படிங்க : ராகுல் – விஜய் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியைத் தகர்க்குமா?.. தேசிய அரசியலில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம்
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, ஒடிசாவின் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிற்பம் அமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் விஜயின் உருவப்படம், தவெக கொடி, வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.