ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்

Modi welcomes Putin : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா–ரஷ்யா  உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் 4, 2025 இன்று மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்தில் வந்து வரவேற்றார்

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை - பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்

நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் புதின்

Updated On: 

04 Dec 2025 20:48 PM

 IST

புதுடெல்லி, டிசம்பர் 4 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 23வது இந்தியா–ரஷ்யா  உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் 4, 2025 இன்று மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேரடியாக விமான நிலையத்தில் வந்து வரவேற்றார். ரஷ்யா அதிபரின் வருகைக்காக இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனயடுத்து ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்த சம்பவம்  ஹைலைட்டாக அமைந்தது.

ஒரே காரில் பயணித்த பிரதமர் மோடி – புதின்

அதனைத் தொடர்ந்து, இரண்டு தலைவர்களும் ஒரே காரில் பாலம் விமான நிலையத்திலிருந்து லோகல்கல்யாண் மார்க் உள்ள பிரதமர் இல்லத்திற்கு புறப்பட்டனர். புடின் இதுகுறித்து இந்திய டுடேக்கு வழங்கிய பேட்டியில், மோடி அவர்களுடன் ஒரே காரில் பயணம் செய்தது என் ஐடியாதான். அது நமது நட்பின் ஒரு சின்னம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : புதின் இந்திய வருகை…. கமாண்டோ, ஸ்னைப்பர், டிரோன் மற்றும் ஏஐ – 5 அடுக்கு பாதுகாப்பு

புதினை வரவேற்ற பிரதமர் மோடி

 

உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் தொடங்கியதிலிருந்து புதினின் முதல் இந்திய வருகை இதுவாகும். முக்கிய துறைகளின் அமைச்சர்கள் புதினுடன் இந்தியா வந்துள்ளனர். வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் பல ஒப்பந்தங்களை புதின் மற்றும் மோடி தொடங்கி வைப்பார்கள். அரசாங்கங்களுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.

மேலும், வணிக மற்றும் வணிக சாரா அமைப்புகளுக்கு இடையே 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பிரச்னைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டில் இந்தியா தலைமை தாங்கும் ஐக்கிய நாடுகள் சபை, SCO, G20, BRICS மற்றும் BRICS ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து மோடி-புதின் விவாதிப்பார்கள்.

இதையும் படிக்க : சிறுத்தை திட்டம்.. இந்தியா லட்சிய முயற்சி வெற்றி – பிரதமர் மோடி

இந்தியா மற்றும் ரஷ்யா இருதரப்பு உறவுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, இரு நாடுகளும் இணைந்து 2030க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன. இதற்கான நடைமுறை நடவடிக்கைகள் உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய- உக்ரைன் போருக்கு பிறகு முதன்முறையாக புதின் இந்தியா வந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி