தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்த ஓய்வு பெற்ற காவலர்.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

Cop Killed By Bees | உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் தனது மகள்களுடன் தோட்டத்திற்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது அவரை தேனீக்கள் தாக்கியதில் பலத்த காடமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்த ஓய்வு பெற்ற காவலர்.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 Dec 2025 20:07 PM

 IST

லக்னோ, டிசம்பர் 01 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், ஏட்டா மாவட்டம், கிராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அட்டர் சிங். இவர் உத்தர பிரதேச காவல்துறையில், காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது பணி ஓய்வுக்கு பிறகு தனது மகள்களுடன் கிராதாபாத் பகுதியில் வசித்து வந்துள்ளார். ஓய்வு வாழ்க்கையை அவர் இனிமையாக வாழ்ந்துக்கொண்டு இருந்த நிலையில், தேனீக்கள் கொட்டியதால் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனீக்கள் கொட்டியதால் பரிதாபமாக பலியான காவலர்

சம்பவத்தன்று அட்டர் சிங் தனது இரண்டு மகள்களுடன் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த தேனீக்கள் திடீரென அவர்களை தாக்க தொடங்கியுள்ளது. தேனீக்கள் கூட்டமாக தாக்க வருவதை கண்ட அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இடையே அட்டர் சிங் மற்றும் அவர்களது மகள்களை தேனீக்கள் கொட்ட தொடங்கியுள்ளன. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது தேனீக்கள் அட்டர் சிங்கை விடாமல் கொட்டியுள்ளது. இதனால் அவர் மிகுந்த வலியால் அலறி துடித்துள்ளார்.

இதையும் படிங்க : காதலனை கொலை செய்த குடும்பம்.. இறுதி சடங்கில் காதலனை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்!

மயங்கி விழுந்து உயிரிழந்த அட்டர் சிங்

ஒருகட்டத்தில் அட்டர் சிங் அந்த பகுதியிலே மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள்கள் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தங்களது தந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது அவர்களது மகள்களுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : ஐயப்ப பக்தர்களை குறி வைத்து நடக்கும் மோசடி.. கேரளா போலீசார் எச்சரிக்கை!

அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்

தேனீக்கள் கொட்டியதில் ஓய்வு பெற்ற காவலர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்.. முழு பணத்தையும் ரீஃபண்ட் செய்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்..
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ