Rajnath Singh: சில முதலாளிகளுக்கு இந்தியா மீது பொறாமை.. டிரம்பை மறைமுகமாக சாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Rajnath Singh Slams Trump's Tariffs: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50% இறக்குமதி வரியைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையை வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சியை சில நாடுகள் பொறாமைப்படுவதாகவும், அதைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Rajnath Singh: சில முதலாளிகளுக்கு இந்தியா மீது பொறாமை.. டிரம்பை மறைமுகமாக சாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published: 

10 Aug 2025 17:18 PM

டெல்லி, ஆகஸ்ட் 10: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை, மத்திய அரசு முதல் மாநில அரசுகள் வரை தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மிகவும் வலுவான மற்றும் துடிப்பான பொருளாதாரம் என்றும், நாம் நாம் அனைவருக்கும் முதலாளி” என்ற மனப்பான்மையைக் கொண்ட சில நாடுகள் இதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன..?

டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “சில முதலாளிகள் இந்தியாவின் வேகமான வளர்ச்சி விகிதத்தை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். சிலர் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. நாம் அனைவருக்கும் முதலாளி என்றால், இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று நினைக்கிறார்கள்.

ALSO READ: விவசாயிகளின் நலனே முக்கியம்.. சவாலுக்கு நான் தயார்! அமெரிக்க வரி குறித்து பேசிய பிரதமர் மோடி!

அதிபர் டொனால்ட் டிரம்பை மறைமுகமாக சாடிய ராஜ்நாத் சிங்:

சில நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய கைவினைப் பொருட்கள் என மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது விலை போதுமானதாக உள்ளது. இதனால் விலைகள் அதிகரிக்கும்போது உலகம் அவற்றை வாங்குவதை நிறுத்திவிடும். அதன்படி, இந்தியா ஒரு பெரிய உலகளாவிய சக்தியாக மாறுவதை இப்போது உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

ALSO READ: இந்திய எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்?.. ராணுவம் விளக்கம்!

வலுவாக உள்ள பாதுகாப்பு ஏற்றுமதி:

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் வலிமைக்கு பாதுகாப்புத் துறை ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. நாங்கள் ரூ.24,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இது புதிய இந்தியாவின் புதிய பாதுகாப்புத் துறை, ஏற்றுமதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன” என்று தெரிவித்தார்.