டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.. பிரம்மாண்டமாக நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சி..
Republic Day 2026: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோகா சக்கர விருதை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் படை வலிமையும் பன்முகக் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது.

கோப்பு புகைப்படம்
டெல்லி, ஜனவரி 26, 2026: நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 77வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி கர்த்தவ்ய பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்தூவல் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சுபான்ஷு சுக்லாவிற்கு அசோகா சக்கர விருது:
இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோகா சக்கர விருதை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் படை வலிமையும் பன்முகக் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது.
கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு:
77th #RepublicDay🇮🇳 | A detachment of Special Forces, comprising Ajayketu All-Terrain Vehicle, Randhwaj Rugged Terrain Tactical Transport System and Dhawansak Light Strike Vehicles at Kartavya Path, New Delhi
(Source: DD) pic.twitter.com/BoDyK3IRqt
— ANI (@ANI) January 26, 2026
குடியரசு தின விழாவில் கூடுதல் சிறப்பாக, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ லூயிஸ் கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் கண்டு களித்தனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 77வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.. செல்போனில் நேரலை எப்படி பார்ப்பது? விவரம் இதோ..
இந்த அணிவகுப்பில் இராணுவ சக்தியின் தனித்துவமான சங்கமம் காணப்பட்டது. ரஃபேல், சுகோய் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் சாகசக் காட்சிகளை நிகழ்த்தின. மேலும், பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்புகள், அர்ஜுன் போர் டேங்க் மற்றும் சூர்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றின் வலிமையும் வெளிப்படுத்தப்பட்டது.
முதல் முறையாக, புதிதாக உருவாக்கப்பட்ட பைரவ் லைட் கமாண்டோ பட்டாலியன் மற்றும் சக்திபன் ரெஜிமென்ட் அணிவகுப்பின் ஒரு பகுதியாக இடம்பெற்றன. இந்த ஆண்டு, ஜான்ஸ்கர் குதிரைகள் மற்றும் இரண்டு திமில்கள் கொண்ட பாக்டிரியன் ஒட்டகங்களும் அணிவகுத்துச் சென்றன. 300 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் கொண்ட ‘சூர்யாஸ்திரா’ யூனிவர்சல் ராக்கெட் லாஞ்சர் அமைப்பு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற விமானக் கண்காட்சி (Flypast) நிகழ்ச்சியில், ரஃபேல், சு-30, P-8I, மிக்-29, அபாச்சி, LCH, ALH, Mi-17, C-130, C-295 உள்ளிட்ட மொத்தம் 29 விமானங்கள் பங்கேற்றன.