77வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.. செல்போனில் நேரலை எப்படி பார்ப்பது? விவரம் இதோ..
Republic Day Parade: 77வது குடியரசு தின அணிவகுப்பு, கடந்த பல தசாப்தங்களாக இந்தியா அடைந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் உட்பட இந்தியாவின் ராணுவ வலிமை ஆகியவை பிரதானமாக இடம்பெறவுள்ளன.
புதுடெல்லி, ஜவனரி 26, 2026: இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை 2026 ஜனவரி 26ஆம் தேதி கொண்டாட உள்ளது. வழக்கம்போல், இந்த சிறப்பு நாளில் உலகப் புகழ்பெற்ற குடியரசு தின அணிவகுப்பு, நியூடெல்லியில் உள்ள கர்த்தவ்ய பாத் (முன்னாள் ராஜ்பாத்) பகுதியில் இருந்து தொடங்கவுள்ளது. எந்த காரணத்தினாலும் தொலைக்காட்சியில் நேரலையாக இந்த அணிவகுப்பைப் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்கள் தங்களது கைபேசிகளில் நேரலையாக இந்த அணிவகுப்பைப் பார்த்து ரசிக்கலாம். இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தானே?
குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய அம்சங்கள்:
77வது குடியரசு தின அணிவகுப்பு, கடந்த பல தசாப்தங்களாக இந்தியா அடைந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் உட்பட இந்தியாவின் ராணுவ வலிமை ஆகியவை பிரதானமாக இடம்பெறவுள்ளன. அணிவகுப்பு, பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதுடன் தொடங்கும்.
இந்தியாவின் தேசிய சின்னங்கள் – குடியரசின் அடையாளங்கள்:
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தேசியச் சின்னமான அசோகச் சக்கரம், இந்திய குடியரசின் அடையாளமாக விளங்கும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
தேசியக் கொடி ஏற்றம்:
இதனைத் தொடர்ந்து, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றுவார். முழு நிகழ்ச்சியும் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சிக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், தங்களது கைபேசிகள் மூலம் குடியரசு தின அணிவகுப்பை நேரலையாகக் காணலாம். இதற்கான நேரம் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்ப்போம்.
கைபேசியில் குடியரசு தின அணிவகுப்பை நேரலையாக காணலாம்:
2026ஆம் ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பு, திங்கட்கிழமை, ஜனவரி 26ஆம் தேதி நடைபெறுகிறது. அணிவகுப்பு காலை 9.30 மணிக்கு தொடங்கும். பாதுகாப்பு சோதனைகள் மற்றும் நுழைவு விதிமுறைகள் காரணமாக, நேரில் கலந்துகொள்ளும் பார்வையாளர்கள் முன்னதாகவே வருகை தர அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த அணிவகுப்பை அதிகமான மக்கள் பார்க்கும் வகையில், பல்வேறு தளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய ஒளிபரப்பாளரான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும். அதேபோல், தூர்தர்ஷனின் யூடியூப் சேனல், அகில இந்திய வானொலி (AIR) யூடியூப் சேனல், PIB மற்றும் MyGov யூடியூப் சேனல்களிலும் நேரலை ஒளிபரப்பு நடைபெறும்.
இதற்கிடையே, பெரும்பாலான செய்தி சேனல்களும் குடியரசு தின அணிவகுப்பை நேரலையாக ஒளிபரப்பவுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்வை காண முடியும். இந்த வசதியின் மூலம், இணைய இணைப்பு இருந்தால் யாரும் எங்கு இருந்தாலும் இந்த மகத்தான நிகழ்வை நேரலையாகக் கண்டு ரசிக்கலாம்.