லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கிய காவலர்.. குழந்தையை போல கதறி அழுத வீடியோ வைரல்!
Police Officer Caught Red Handed While Getting Bribe | கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள சமராஜ்பேட் பகுதியில் லஞ்சம் பெற்ற காவலர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் குழந்தையை போல கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
பெங்களூரு, ஜனவரி 31 : கர்நாடகா (Karnataka) மாநிலம், கே.பி அக்ரஹாரா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜு. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அக்பர் என்பவரை பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டி ரூ.5 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த நிலையில், கோவிந்தராஜ் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தான் தவறு செய்து மாட்டிக்கொண்டதை உணர்ந்த அவர் சிறு பிள்ளை போல கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வழக்கில் சிக்க வைப்பேன் என மிரட்டி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட காவலர்
காவலர் கோவிந்தராஜு கேட்டதன் பேரில் அக்பர் அவருக்கு ஜனவரி 24, 2026 அன்று ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில், கோவிந்தராஜு லஞ்சம் கேட்பது தொடர்பாக அக்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜு லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கும்போது அவரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய எக்ஸ் பதிவு வைரல்!
அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அக்பரிடம் கொடுத்து அதனை கோவிந்தராஜுவிடம் கொடுக்க சொல்லி கூறியுள்ளனர். அவர்கள் கூறியப்படியே சமராஜ்பேட் பகுதிக்கு கோவிந்தராஜுவை வரவழைத்த அக்பர் அவரிடம் அந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார், அவரை கையும், களவுமாக கைது செய்துள்ள`னர்.
குழந்தை போல் அழுது ஆர்பாட்டம் செய்த காவலர்
Police Inspector in Bengaluru gets trapped while accepting a big ticket bribe of ₹4 lakh.
Its a shame that those sworn in to uphold the law are breaking it for the lure of money.
This video should send shivers to the rest that their time is near too pic.twitter.com/42apXGlls7
— Karthik Reddy (@bykarthikreddy) January 30, 2026
அவரை கைது செய்த போலீசார், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். முன்னதாக கோவிந்தராஜை அதிகாரிகள் கைது செய்தபோது அவர் குழந்தை போல கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.