பிரதமர் மோடி அணிந்த ரூ.60,000 மதிப்பிலான விலையுயர்ந்த வாட்ச் – இதில் என்ன ஸ்பெஷல்?

PM Modi’s Luxury Watch: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள வாட்ச் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரோமன் பாக் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த வாட்ச்சின் விலை ரு.60,000 என கூறப்படுகிறது. அப்படி இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிரதமர் மோடி அணிந்த ரூ.60,000 மதிப்பிலான விலையுயர்ந்த வாட்ச் - இதில் என்ன ஸ்பெஷல்?

பிரதமர் நரேந்திர மோடி

Published: 

18 Nov 2025 22:05 PM

 IST

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மீண்டும் ஒருமுறை இந்திய கைவினை கலைஞர்களையும், இந்தியாவில் உருவாகியுள்ள பொருட்களை ஊக்குவிக்கும் விதமாக வாட்ச் ஒன்றை அணைந்திருக்கிறார். இந்த வாட்ச்சின் விலை ரூ.60,000. இந்த வாட்ச் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வாட்ச் கம்பனியான ரோமன் பாக்  நிறுவனம் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட கடிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த வாட்ச்சை செப்டம்பர் முதல் நவம்பர், 2025 வரை பல பொதுக் கூட்டங்களில், பயணங்களில், அரசு நிகழ்ச்சிகளில்  பிரதமர் மோடி அணிந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1947 ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நாணயம்

ரோமன் பாக் வாட்சின் மிகப்பெரிய சிறப்பு அதன் டயல் பகுதி. இதில் 1947ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தியாவின் ஒரு ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது. அந்த நாணயத்தில் காணப்படும் இந்தியாவின் புகழ்பெற்ற புலியின் உருவமே வாட்சின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இந்த நாணயத்தை பயன்படுத்தியிருப்பது சாதாரண டிசைன் அல்ல.  கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று தருணத்தை, புதிய அடையாளத்தை, வளர்ச்சியையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி வலியுறுத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை..

பிரபலமாகும் பிரதமர் மோடியின் வாட்ச்

 

இந்த வாட்ச் 43 மிமீ அளவுள்ள 316எல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்ப்டடுள்ளது.  இதில் ஜப்பானின் மியோட்டா ஆட்டோமேட்டிக் மூவ்மென்ட் பொருத்தப்பட்டுள்ளது.  இது நேரத்தை துல்லியமாக காட்ட உதவுவதோடு, வாட்ச் மிகவும் சீராக இயங்க உதவும். இந்த வாட்ச்சின் முன், பின்  என இருபுறமும் சாப்பையர் கிரிஸ்டல் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இது எந்த கோணத்தில் பார்த்தாலும் தெளிவாக தெரியும் டிரான்ஸ்பரெண் கேஸ் பேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் சேர்ந்து இந்த வாட்ச்சை பிரீமியம் குவாலிட்டியை காட்டப்படுகிறது.

இதையும் படிக்க : டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத இந்தியாவின் முதல் நகரம்.. எது தெரியுமா?

இந்த வாட்ச்சின் விலை எவ்வளவு?

ரோமன் பாக் வாட்சின் விலை சுமார் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பிரிவில் இதுவொரு அணுகக்கூடிய விலை கொண்ட தயாரிப்பாக கருதப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பும், கைவினை நயமும், பிரீமியமான வடிவமைப்பும் சேர்ந்து இந்த வாட்சை அணிபவருக்கு கூடுதல் மதிப்பை வழங்குகிறது.  ஜெய்ப்பூர் வாட்ச் கம்பனியை உருவாக்கியவர் கௌரவ் மேத்தா. இந்தியாவின் அரிய நாணயங்கள், தபால் தலைகள், பாரம்பரிய சின்னங்கள் போன்றவற்றை கொண்டு வாட்ச் உருவாக்குவதில் இந்த நிறுவனம் தனித்தன்மை பெற்றுள்ளது.

8 மணி நேர வேலை கோரிய தீபிகா படுகோன்
காதலரை கரம் பிடிக்கப்போகும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா?
பென்சிலால் துளையிடும் அளவுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளின் தரம்
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?