Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விரைவில் காங்கிரஸ் பிளவுபடும் – பிரதமர் மோடி அதிரடி கருத்து – காரணம் என்ன?

Narendra Modi : பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்  வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி  பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும் என்றார்.

விரைவில் காங்கிரஸ் பிளவுபடும் – பிரதமர் மோடி அதிரடி கருத்து – காரணம் என்ன?
நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Nov 2025 20:42 PM IST

பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்  வெளியான நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி  பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து உள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), காங்கிரஸ் கட்சியில் விரைவில் பெரிய பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மக்கள் காங்கிரசை முழுமையாக நிராகரித்து விட்டனர். இனியும் அந்தக் கட்சியின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் என்று தனது கணிப்பை வெளியிட்டார். அவரது பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

‘காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும்’

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார். தேர்தல் முடிவு வெளியான நாளில் பேசிய அவர், காங்கிரசில் மேலும் ஒரு பெரிய பிளவு உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : இளம் பாடகி முதல் சினிமா நடிகர் வரை.. பீகாரில் ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் என்ன?

டெல்லி பாஜக தலைமையகத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அவர், பீகாரின் இந்த வெற்றி தேசிய ஜனநாயக அரசு செய்த நல்லாட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஜனநாயக அமைப்புகளை சாடி வருகிறது. தேர்தல் ஆணையத்தை குறைசொல்வது,  ஓட்டு திருட்டு போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களை பிரிப்பது என நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களை மேற்கொண்டு வருகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

பீகார் தேர்தல் வெற்றி குறித்து பேசிய பிரதமர் மோடி

 

மேலும் அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சிக்கு நாட்டிற்கான நேர்மறை பார்வையே இல்லை. மக்கள் ஏற்கனவே அந்தக் கட்சியை நிராகரித்து வருகிறார்கள். பீகாரில் நாம் பெற்றுள்ள வெற்றி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தக் கட்சி எந்த நேரத்திலும் உடைந்துவிடும் சூழ்நிலை உள்ளது என்று பேசினார்.

இதையும் படிக்க : பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!

பிரதமர் மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி 2வது முறையாக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே காங்கிரஸில் பிளவு ஏற்படும் என அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.