PM Modi’s Nation Address: ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு.. பிரதமர் மோடி பெருமிதம்!
PM Modi on Operation Sindoor : இந்தியாவின் ராணுவ வீரர்கள் மற்றும் உளவுத்துறைக்கு தலை வணக்குகிறேன். இந்தியாவின் வலிமையும், பொறுமையையும் நாம் பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திய இந்திய இராணுவத்திற்கு எனது சல்யூட். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்லி, மே 12: பஹல்காம் தாக்குதல் (Pahalgam Terror Attack), ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று அதாவது 2025 மே 12ம் தேதியான இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் ராணுவ வீரர்கள் மற்றும் உளவுத்துறைக்கு தலை வணக்குகிறேன். இந்தியாவின் வலிமையும், பொறுமையையும் நாம் பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமான நடத்திய இந்திய இராணுவத்திற்கு எனது சல்யூட். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்தியப் படைகள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தின. பயங்கரவாதிகளை முடிவுக்குக் கொண்டுவர ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தோம்.” என்று பேசினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடிய தருணம்:
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பங்களுக்கு முன்பாகவே கொல்லப்பட்டனர். நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதிக்கான ஒரு உறுதிமொழி. இந்தியா இவ்வளவு பெரிய முடிவை எடுக்க முடியும் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நாடு உயர்ந்ததாக இருக்கும்போது, இவ்வளவு வலுவான முடிவுகள் எடுக்கப்படும்.
இந்தியா இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்க்கவிலை. பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்துவிட்டனர். எனவே, இந்திய இராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய இராணுவம் 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது.
தகுந்த பதிலடி கொடுப்போம்:
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை ஆதரிப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. தொடர்ந்து, பாகிஸ்தான் கோயில்கள், சர்ச் உள்ளிட்ட மதரீதியான கட்டிடங்களை தாக்க முயற்சித்தது. அப்போது, பாகிஸ்தான் இராணுவம் ட்ரோன்களை வைக்கோல் போல இந்தியா மீது வீசி எறிந்தது. பயங்கரவாதிகளையும் அவர்களை ஆதரிப்பவர்களும் ஒன்றுதான். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் புதிய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம். எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நமது இந்திய மக்களை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து தீர்க்கமான முடிவுகளை எடுப்போம். போர்க்களத்தில் பாகிஸ்தானை தொடர்ந்து தோற்கடித்து வருகிறோம். பாலைவனத்திலும், மலைகளிலும் நமது திறமைகளை நிரூபித்துள்ளோம்.
உலகில் எங்கெல்லாம் பெரிய தாக்குதல்கள் நடந்திருக்கிறதோ, அவை அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை. பஹவல்பூரும் முரிட்கேவும் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்து வருகின்றன. இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் அவர்களின் பயிற்சி மையங்களைத் துல்லியமாகத் தாக்கின. இந்தியா இவ்வளவு பெரிய முடிவை எடுக்க முடியும் என்று பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்ததில்லை, ஆனால் நாடு ஒன்றுபட்டால், முதலில் தேசம், உயர்ந்தது, பின்னர் வலுவான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. முடிவுகள் காட்டப்படுகின்றன.” என்று பேசினார்.