அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?
PM Modi Ayodhya Ram Temple Visit : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 2025 நவம்பர் 25ஆம் தேதி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அயோத்தி ராமர் கோயிலின் கோபுரத்தில் 21 அடி உயரக் கொடியை அவர் ஏற்ற உள்ளார்.

பிரதமர் மோடி
உத்தர பிரதேசம், அக்டோபர் 10 : உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 2025 நவம்பர் 25ஆம் தேதி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அயோத்தி ராமர் கோயிலின் கோபுரத்தில் 21 அடி உயரக் கொடியை அவர் ஏற்ற உள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததைக் குறிக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளி மாநிலங்களில் மட்டுமின்றி, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்களை ராமர் கோயிலில் தரிசனம் செய்து வருகிறது. அயோத்தி ராமர் கோயில் 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
2020ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் நடந்த நிலையில், 2024ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டால், இன்னும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகள் 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து தயாராகி விடும் என கூறுகின்றனர். அயோத்தி ராமர் கோயில் பாரம்பரிய முறையில் மூன்று மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. கோயிலின் பிரதான கருவறையில் ராமர் சிலையும், முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பாரும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி அம்மன், விநாயகர், சூரிய பகவான என நான்கு கோயில்கள் உள்ளன.
Also Read : பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி.. இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பிரதமர் மோடி
இப்படியாக சிறப்பு வாய்ந்த அயோத்தி ராமர் கோயிலில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நவம்பருக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி 2025 நவம்பர் 25ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தர உள்ளார். அங்கு அயோத்தி ராமர் கோயிலின் கோபுரத்தில் 21 அடி உயரக் கொடியை அவர் ஏற்ற உள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததைக் குறிக்கிறது.
இதுகுறித்து பேசிய அயோத்தி கோயில் கட்டுமான குழுவின் தலைர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், “அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளை சார்பாக பிரதமர் மோடிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி ராமர் கோயிலின் கொடியேற்ற விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும். பிரதமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்” என்று தெரிவித்தார்.
Also Read : இறக்குமதி செலவு கம்மி.. வேலைவாய்ப்பு அதிகம் – பிரதமர் மோடி சொன்ன பாசிட்டிவ் விஷயங்கள்!
எல்லைச் சுவர் மற்றும் அரங்கம் போன்ற இறுதிப் பணிகள் 2026 வரை நீடிக்கும் என்றும், நவம்பர் மாத இறுதிக்குள் மையக் கட்டுமானம் தயாராகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். நவம்பர் 25 ஆம் தேதிக்குள் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, முழு வளாகத்தையும் பார்வையிட பக்தர்களுக்குத் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.