ரஷ்ய விவகாரம் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

India-Ukraine Diplomacy : உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலேன்ஸ்கியுடன் போர் குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது உக்ரைன் அதிபர் போர் குறித்த தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்ய விவகாரம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

உக்ரைன் அதிபர் ஜெலேன்ஸ்கியுடன் பிரதமர் மோடி

Updated On: 

11 Aug 2025 19:41 PM

புதுடெல்லி, ஆகஸ்ட் 11:  இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலேன்ஸ்கியுடன் (Volodymyr Zelenskyy) ஆகஸ்ட் 11, 2025 அன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது போர் தொடர்பாகவும் உக்ரைனின் நிலைப்பாடு குறித்தும் உக்ரைன் (Ukraine)அதிபர் ஜெலென்ஸ்கி பேசினார். மேலும் இந்தியா அமைதியை வலியுறுத்துவதாக பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.  இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் நிலைப்பாடு குறித்து தனது பார்வையை பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் பகிர்ந்து கொண்டார்.  இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, அமைதியை நிலைநிறுத்துவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும்.  இதற்காக தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்க இந்தியா எப்போதும் தயாராக இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களும் இந்தியா – உக்ரைன் இரு தரப்பு உறவுகள் குறித்து முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துக்கொண்டதோடு, மேலும் வலுப்படுத்தும் வழிகள் பற்றியும் ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் தொடர்ந்து நாடுகளின் நலன் குறித்து இணைந்து பணியாற்ற இருவரும் உறுதியேற்றனர். குறிப்பாக ரஷ்யா – உக்ரைன்போர் சூழலில் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உக்ரைன் அதிபருடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவு

 

உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறித்து  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் போர் குறித்து சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இரு நாடுகளுக்கு இடேயேயான மோதலை விரைவாகவும் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்தேன். இதற்காக இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் செய்யும் என உறுதி அளித்தேன். அதே நேரம் உக்ரைனுடன் உறவை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா தனது முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சுவார்தை உலக அரசியல் அரங்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.