”Vocal For Local”.. இந்திய தயாரிப்புகளை வாங்கி மகிழுங்கள்.. தீபாவளி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..

PM Modi Diwali Wishes: பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தீபத்திருநாள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரட்டும். அதுவே எங்கள் உண்மையான விருப்பம்,” என குறிப்பிட்டுள்ளார்.

”Vocal For Local.. இந்திய தயாரிப்புகளை வாங்கி மகிழுங்கள்.. தீபாவளி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Oct 2025 08:01 AM

 IST

அக்டோபர் 20, 2025: தீபாவளி திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரது X (எக்ஸ்) வலைதளப் பதிவில், “நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தீபத்திருநாள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரட்டும். அதுவே எங்கள் உண்மையான விருப்பம்,” என குறிப்பிட்டுள்ளார். மேலும், MyGov (மை கவர்மெண்ட்) என்னும் அரசு இணையதளத்தில் பதிவு செய்திருந்த மக்களுக்கு, மின்னஞ்சல் மூலமாகவும் மோடி தனது வாழ்த்துகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர், “நாட்டு மக்களே! அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இரண்டாவது வருடமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ராமர் அநீதியை எதிர்த்து போராடும் பலத்தை வழங்குகிறார்; ஆபரேஷன் சித்தூர் இதற்குத் தலைசிறந்த உதாரணம்,” என தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தீபாவளி திருநாள்:

நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்த நாளை நாம் தீபத்திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களை அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். தீபாவளி திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இந்திய தயாரிப்புகளை வாங்க பிரதமர் மோடி அழைப்பு:


மேலும், இந்த தீபாவளி தினத்தில் நாம் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி ‘சுதேசி’ என்று பெருமையாகச் சொல்ல வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார். அவரது X பதிவில், “140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை கொண்டாடும் விதமாக இந்த பண்டிகைக் காலத்தை கொண்டாடுவோம். இந்திய பொருட்களை வாங்கி ‘கர்வ் சே கஹோ – சுதேசி!’ என்று சொல்லுங்கள். நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிரவும்; அதன் மூலம் பிறரையும் இதில் ஈடுபட ஊக்குவிக்கலாம்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:  சைவத்திற்கு பதிலாக அசைவ பிரியாணி.. ஆத்திரத்தில் உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட நபர்..

சிறப்பு வீடியோ மற்றும் சமூக ஊடக முயற்சி:

இதற்காக ஒரு குறும்பட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபலங்கள் பலர் இந்திய தயாரிப்பு பொருட்களை வாங்குகிற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி அதனுடன் செல்ஃபி எடுத்துப் NaMo App (நமோ செயலி) மூலம் பகிர்ந்தால், அதனை பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளங்களில் பகிர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘Vocal for Local’ என்ற தாரகமந்திரத்தை மக்களிடையே வலியுறுத்தும் முயற்சியாக இது கூறப்பட்டுள்ளது.