பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

PM Modi Visit To Bengaluru: பெங்களூரு வருகை தந்த பிரதமர் மோடி அங்கே 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அதே போல் பிரதமர் பெங்களூருவில் 3 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

பெங்களூருவில் பிரதமர் மோடி

Published: 

10 Aug 2025 13:37 PM

பெங்களூரு, ஆகஸ்ட் 10, 2025: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் இன்று அதாவது ஆகஸ்ட் 10 2025 அன்று காலை 10:30 மணிக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜக தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு மூன்று வந்தே பாரத் ரயில்களின் சேவைகளை துவக்கி வைத்தார். அமிர்தசரஸில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மற்றும் நாக்பூர் (அஜ்னி) முதல் புனே வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் நிற வழி தடத்தை திறந்து வைத்தார்.

இதில் முக்கியமாக ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த விழாவின்போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்யா கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் வருகை தந்திருக்க கூடிய நிலையில் அங்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெங்களூரு : 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி:


மேலும் பெங்களூருவில் சல்லகட்டா முதல் வைட்ஃபீல்டு வரை ஊதா நிறப் பாதையிலும், சில்க் போர்டில் இருந்து மாதவரா வரை பசுமை நிறை பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப் பாதையில் உள்ள ஆர்.வி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது இது டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் பாதையாகும்.

மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 20 சதவீதம் தள்ளுபடி.. எப்போது? யார் யாருக்கு?

3ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி:

அதன் பிறகு ஜே.பி நகர் 4வது பிளாக் இல் இருந்து கடப்புக்கெரா வரையிலான மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 3 ஆம் கட்ட பாதை ரூ.15,610 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த பாதை நீளம் 44 கி.மீட்டராகும், இதில் 31 உயர்த்தப்பட்ட நிலையங்கள் இருக்கும்.அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.