மூடப்படாத ரயில்வே கேட்… திடீரென ரயிலின் குறுக்கே வந்த லாரி – பரபரப்பு சம்பவம்
Railway Crossing Mishap : ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகர் என்ற பகுதியில் சிக்னல் வழங்கப்படாததால் ரயில்வே கேட் மூடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ரயில் வந்தபோது குறுக்கே லாரி வந்ததால், லாரி மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

லாரி மீது ரயில் மோதி விபத்து
ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராஸிங் பகுதியில்ல் ஜனவரி 22, 2026 அன்று காலை ஏற்பட்ட ரயில் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதிகாலை நேரத்திலிருந்து அந்த பகுதியில் சாலை போக்குவரத்து அதிகரித்திருந்த நிலையில், லெவல் கிராஸிங் பகுதியில் லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கொண்டா – அசன்சோல் பயணிகள் ரயில் அந்த வழியாக வந்தபோது, அங்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய அனுமதி சிக்னல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரயில் தடத்தில் நுழைந்ததால் கடவையை கடந்துகொண்டிருந்த லாரி மீது நேரடியாக மோதியது.
மூடப்படாத ரயில்வே கேட்டால் பரபரப்பு
இந்த விபத்தின் காரணமாக ரயிலின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. அதே நேரத்தில், லாரியின் அருகில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தது.. விபத்து நிகழ்ந்த அந்தக் கணத்தில் அங்கு இருந்தவர்கள் பயத்தில் அலறியபடி ஓடி தங்களை பாதுகாத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் உடனடியாக அங்கிருந்து விலகியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதையும் படிக்க : சர்ச்சை வீடியோவால் தற்கொலை.. பேருந்தில் அட்டைப் பெட்டிகளுடன் பயணித்து ஆண்கள் போராட்டம்..
ரயில் விபத்து தொடர்பான வீடியோ
VIDEO | Deoghar, Jharkhand: A passenger train engine collided with a truck and several motorcycles at Nahwadih crossing. No casualties have been reported so far. Visuals from the spot.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/80E5hqSDrp
— Press Trust of India (@PTI_News) January 22, 2026
லாரி முழுமையாக சேதமடைந்து சாலையில் நின்றதால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட உடனே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேல்தடம் மற்றும் கீழ்தடங்களில் செல்ல வேண்டிய ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிக்க : ரூ.6 கோடி மதிப்பிலான 6.5 மி.லி. கொடிய பாம்பு விஷம் பறிமுதல்.. 7 பேர் அதிரடியாக கைது..
சேதமடைந்த ரயில் பகுதியை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றதுடன், சாலையில் இருந்து விபத்துக்குள்ளான லாரியும் அகற்றப்பட்டன. சில மணி நேர முயற்சிக்குப் பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அலட்சியம் அல்லது விதிமுறை மீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உள்ளூர் மக்கள், ரயில் வேகம் அதிகமாக இருந்திருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் எனக் கூறி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.