Operation Keller: ஜம்மு காஷ்மீரில் சுற்றி வளைத்த இந்திய இராணுவம்.. 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற சம்பவம்..!
Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், இந்திய ராணுவம் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உளவுத் தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில் இந்திய ராணுவத்தினருக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. மேலும், அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ஜம்மு காஷ்மீர், மே 13: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு, அந்த பகுதி முழுவதும் இந்திய இராணுவத்தின் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனுடன், அந்த பகுதிகளின் பல இடங்களில் தேடுதல் வேட்டைகளும், வேறு பல பாதுகாப்பு விஷயங்களும் இன்னும் நடந்து வருகின்றன. இந்தநிலையில், ஜம்மு – காஷ்மீரின் (Jammu and Kashmir) சோபியானின் கெல்லர் பகுதியில் இன்று அதாவது 2025 மே 13ம் தேதி ஆயுதப்படைகளுடன் நடந்த மோதலில் 3 லஷ்கர் – இ- தொய்பா (Lashkar-e-Taiba) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்திய இராணுவம் நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதலை தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
3 பயங்கரவாதிகளை கொன்ற இந்திய இராணுவம்:
உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புப் படையினர் 2 முதல் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி உடனடியாக கொல்லப்பட்டார். 2 மணி நேர நீண்ட தேடுதல் வேட்டை மற்றும் என்கவுண்டருக்கு பிறகு மீதமுள்ள 2 பயங்கரவாதிகளையும் இந்திய இராணுவம் கொன்றது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவம் தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில்தான் பயங்கரவாதிகள் ஒழிந்திருக்கும் இடம் குறித்து இந்திய இராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சுற்றிவளைத்தபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கி கொண்டு தாக்க முயற்சி செய்தனர். இதன் போது, இரு தரப்பிலிருந்தும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. ராணுவம் 3 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளது. தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. உயிரிழந்த அனைத்து பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இந்திய இராணுவம் ஆபரேஷன் கெல்லர் என பெயர் வைத்துள்ளது.
இந்திய இராணுவம் விளக்கம்:
OPERATION KELLER
On 13 May 2025, based on specific intelligence of a #RashtriyasRifles Unit, about presence of terrorists in general area Shoekal Keller, #Shopian, #IndianArmy launched a search and destroy Operation. During the operation, terrorists opened heavy fire and fierce… pic.twitter.com/KZwIkEGiLF
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 13, 2025
இதுகுறித்து இந்திய இராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில், “2025, மே 13ம் தேதியான இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷோபியனின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் தேருதல் வேட்டையை தொடங்கி, தாக்குதலை நடத்தியது.
இதன்போது, இந்திய இராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் விளைவாக 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தேடுதல் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்தது.