பயங்கர நிலநடுக்கம்.. பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்.. குவியும் பாராட்டு!

Assam Earthquake : வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள உடல்குரி என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகளை செவிலியர்கள் பாதுகாத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செவிலியர்களின் செயலை பாராட்டி, சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பயங்கர நிலநடுக்கம்.. பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்.. குவியும் பாராட்டு!

அசாம் நிலநடுக்கம்

Updated On: 

15 Sep 2025 16:09 PM

 IST

அசாம், செப்டம்பர் 15 :  அசாமில் உள்ள உடல்குரி என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகளை செவிலியர்கள் பாதுகாத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக, சமீப காலங்களில் வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் கூட நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 14ஆம் தேதியான நேற்று வடகிழக்கு மாநிலமான அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாமின் உதல்குரி மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:41 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அஸ்ஸாமின் உடல்குரி மாவட்டத்தில் நிலத்திற்கு அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால் மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் பீதியில் வெளியே வந்தனர். இருப்பினும், இதுவரை பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அசாம் தவிர, மேற்கு வங்கம் மற்றும் பூட்டானிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. பூமி திடீரென குலுங்கியதும், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினர். இருப்பினும், எங்கும் பெரிய அளவிலான உயிர் மற்றும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Also Read : Zookeeper-ஐ தனது தாய் என நினைத்து கொஞ்சிய வரிக்குதிரை.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!

பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள்


நல்வாய்ப்பாக மக்கள் அனைவரும் தப்பித்தனர். இதற்கிடையில் அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி உள்ளது.

Also Read :  கத்தியைத் தீட்டிய நபர்…. பயந்து கூண்டுக்குள் ஒளிந்துகொண்ட நாய் – வைரலாகும் வீடியோ

நிலநடுக்கங்களுக்கு மத்தியிலும், குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதுபோது, வார்டில் இருந்த குழந்தைகளை இரண்டு செவிலியர்கள் தொட்டில்களில் இருந்த குழந்தைகளை இறுக்கமாக பிடித்தப்படி நின்றனர். அவர்களின் துணிச்சலான செயலை பாராட்டி சமூக  வலைதளங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.