ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் : ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
Rahul Gandhi faces legal heat : கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக ஜார்ஹண்ட் சைபாசா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் வருகிற ஜுன் 26, 2025 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சைபாசாவில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) மீது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிப்படுத்திய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தாக்கப்பட்ட செய்யப்பட்ட வழக்கில் பிணையில் வர முடியாத வாரண்டை (Non-Bailable Warrant) பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 26, 2025 அன்று ராகுல் காந்தி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சரும் அப்போதைய பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா (Amit Shah) குறித்து தெரிவித்து கருத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா குறித்த ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் பிரதாப் கட்டியார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷாவை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதாப் கட்டியார் என்பவர் ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஏற்க மறுத்ததால் முதலில் ஒரு ஜாமீனில் வரக் கூடிய பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரண்ட் மீது தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இந்த மனு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குகோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கையாக மறுப்பு பெற முடியாத வாரண்டை பாய்ச்சியுள்ளது.
தற்போதைய நிலை
நீதிமன்ற உத்தரவுப்படி வருகிற ஜூன் 26, 2025 அன்று ராகுல் காந்தி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்தால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாகவும் கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வழக்காக பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ள இந்த வழக்கை அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.