பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் தேர்வு – யார் இவர்?
BJP Leadership Change: பாரதிய ஜனதா கட்சி நிதின் நபினை கட்சியின் தேசியத் தலைவராக நியமித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் ஜனவரி 20, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

நிதின் நபின்
பாரதிய ஜனதா கட்சி (BJP) நிதின் நபினை கட்சியின் தேசியத் தலைவராக நியமித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் ஜனவரி 20, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்பார். தற்போது ஜேபி நட்டா வகித்து வரும் தேசியத் தலைவர் பதவியை நிதின் நபின் ஏற்கவுள்ள நிலையில், இது பாஜக கட்சியினரிடையே முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. 45 வயதான நிதின் நபின், பாஜக வரலாற்றில் இளைய தேசியத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறை ஜனவரி 18, 2026 அன்று அறிவிக்கப்பட்டு, ஜனவரி 19, 2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தம மாற்றம் மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ள முக்கியமான சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு நடைபெறுகிறது.
யார் இந்த நிதின் நபின்?
நிதின் நபின், 1980 மே 23 அன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர். அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருரவர். அவர் பீகார் சட்டமன்றத்தில் பட்டணா மேற்கு தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர். நிதின் நபின் தனது பள்ளிப் படிப்பை பாட்னா மற்றும் டெல்லியில் முடித்துள்ளார். இவர் தீப்மாலா ஸ்ரீவாஸ்தவாவை திருமணம் செய்து கொண்டுள்ள அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதையும் படிக்க : பட்ஜெட் 2026: குடும்பங்களின் வரிச்சுமையை குறைக்க.. கூட்டு வரி தாக்கல் முறைக்கு ஆதரவு அதிகரிப்பு
பீகார் மாநிலத்தின் பாங்கிப்பூர் தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மூலம் அரசியலுக்கு வந்த அவர், தொடர்ந்து 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 51,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இதையும் படிக்க : இந்த பொங்கல் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் – தமிழ் மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில், நிதின் நபின் சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சட்டம் மற்றும் நீதித்துறை போன்ற முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், உள்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பாஜக இளைஞர் அணியில் முக்கிய பங்காற்றிய நிதின் நபின், ஜம்மு–காஷ்மீர் தேசிய ஒற்றுமை யாத்திரை, கவுகாத்தி முதல் தவாங் வரை நடைபெற்ற மரியாதை பயணம் உள்ளிட்ட பல இயக்கங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், சிக்கிம் மாநில பொறுப்பாளர், சத்தீஸ்கர் இணைப் பொறுப்பாளர் ஆகிய அமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.