இந்த பொங்கல் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் – தமிழ் மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..
PM Modi Pongal Wish: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 14, 2026 முதல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில், “மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அனைத்து சக குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
ஜனவரி 14, 2026: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனவரி 15, 2026 அன்று பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை பொதுவாக சூரிய பகவானை வழிபடும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனுடன், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்த பயிர்களுக்கு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் பொங்கல் விளங்குகிறது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 16, 2026 அன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு பூஜை செய்து, அவற்றிற்கு பிடித்த உணவுகளை வழங்கி வழிபாடு நடத்துவர். பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். தமிழகத்தில் தீபாவளியை விடவும் பொங்கல் பண்டிகை அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!!
செழிப்பான பொங்கலாக அமைய பிரதமர் மோடி வாழ்த்துக்கள்:
सभी देशवासियों को मकर संक्रांति की असीम शुभकामनाएं। तिल और गुड़ की मिठास से भरा भारतीय संस्कृति एवं परंपरा का यह दिव्य अवसर हर किसी के जीवन में प्रसन्नता, संपन्नता और सफलता लेकर आए। सूर्यदेव सबका कल्याण करें।
— Narendra Modi (@narendramodi) January 14, 2026
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 14, 2026 முதல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில், “மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அனைத்து சக குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வேரூன்றிய இனிமையால் நிறைந்த இந்த தெய்வீக தருணம், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும். சூரிய பகவான் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக” என தெரிவித்தார்.
பொங்கல் கொண்டாட்டம்:
பொதுவாக, பொங்கல் பண்டிகை அன்று குடும்பத்தினருடன் புத்தாடைகள் அணிந்து, அதிகாலை சூரிய பகவானை வணங்கி, வீடுகளில் பொங்கல் வைத்து பூஜைகள் செய்வார்கள். இனிப்பு பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, சர்க்கரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவை அன்றைய உணவில் இடம்பெறும். மேலும், வீட்டில் செய்த உணவுகளை அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.
மேலும் படிக்க: 2026 குடியரசு தினவிழா…சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்…யார் அவர்!
தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கடிதம் எழுதிய பிரதமர் மோடி:

மேலும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், “ மனிதனின் உழைப்பிற்கும். இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு வெற்றி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.