ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி இழுத்து செல்ல முயன்ற கும்பல்.. மும்பையில் பகீர் சம்பவம்!
Mumbai ATM Robbery | மும்பையில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஏடிஎம் மையத்தை காரில் கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளது. இதன் காரணமாக ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி இழுத்த அந்த கும்பல், அது முடியாததால் ஸ்குரு டிரைவர் மூலம் முயற்சி செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
மும்பை, ஆகஸ்ட் 07 : மும்பையில் (Mumbai) கொள்ளை கும்பல் ஒன்று ஏடிஎம் (ATM – Automated Teller Machine) இயந்திரத்தை காரில் கட்டி இழுத்து செல்ல முயற்சி செய்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் அதிகாலையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற நிலையில், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்து பார்த்தபோது மர்ம கும்பல் ஒன்று ஏடிஎம் இயந்திரத்தை கடத்தி செல்ல முயன்று அது முடியாததால் இயந்திரத்தையும் கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி இழுத்து செல்ல முயன்ற கும்பல்
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளை உள்ளது. அதன் அருகே அந்த நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 06, 2025) அதிகாலை வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : Uttarakhand Cloudburst : உத்தரகாண்டில் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு.. கொத்து கொத்தாக அடித்துச் செல்லப்பட்ட மக்கள்!
பலிக்காமல் போன கொள்ளை கும்பலின் திட்டம் – காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நேற்று (ஆகஸ்ட் 06, 2025) அதிகாலை 3 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்துள்ளது. அந்த கும்பல் ஏடிஎம் மையத்தில் கயிறு கட்டி அதனை காருடன் இணைத்து இழுக்க முயன்றுள்ளது. ஆனால் எவ்வளவு முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஸ்குரு டிரைவர் மூலம் ஏடிம் இயந்திரத்தை திறக்க முயன்றுள்ளது. பலவழிகளில், பலமுறை முயற்சி செய்தும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க : Air India : விமானத்தில் ஓடிய கரப்பான் பூச்சிகள்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.