12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தாய் மற்றும் அவரது கல்லக்காதலனுக்கு 180 ஆண்டுகள் சிறை!
180 Years Prison for Mother and Her Lover | கேரள மாநிலம் மலப்புரத்தில் தனது 12 வயது மகளை தனது கள்ளக்காதலன் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு சுமார் 180 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
மலப்புரம், நவம்பர் 06 : கேரள (Kerala) மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான பெண். இவருக்கு 12 வயதில் மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் தாய்க்கும், பாலக்காட்டை சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கணவருடன் வசித்து வந்த அந்த பெண், அவரை பிரிந்து தனது காதலனுடன் வாழ தொடங்கியுள்ளார். அந்த பெண் தனது மகளுடன், கள்ளாதலனுடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில், அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
ஓராண்டாக சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்து வந்த தாயின் காதலன்
அதாவது அந்த நபர் சிறுமியை ஓராண்டு காலமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் சிறுமியை மதுபானம் குடிக்க வைத்தும், ஆபாச படங்களை காட்டியும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த கொடூரத்திற்கு அந்த சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று அவர் தனது காதலனுடன் இணைந்து சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க : சத்தீஸ்கரில் பெரும் ரயில் விபத்து – இதுவரை 6 பேர் பலி… மேலும் உயரும் பலி எண்ணிக்கை?
சிறுமிக்கு உதவிய பள்ளி ஆசிரியை
சிறுமியை அவரது தாயும், கள்ளக்காதலனும் மிரட்டி வந்த நிலையில், தனக்கு நடைபெறும் கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிறுமி தனக்கு நடந்த அனைத்தும் குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவர் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணை தொடர்புக்கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். அவர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : வீட்டை விற்பனை செய்ய மாஸ்டர் பிளான் போட்ட நபர்.. அதிர்ஷ்டத்தை தட்டி தூக்கிய குழந்தை!
தாய், கள்ளக்காதலனுக்கு 180 ஆண்டுகள் சிறை
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு தலா 180 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, அவர்களுக்கு ரூ.11.75 லட்சம் அபராதமும் விதித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் தவனூர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.