4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!

Mother and 4 Children Killed Themselves | ராஜஸ்தானில் தாய் தனது நான்கு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!

உயிரிழந்தவர்கள்

Published: 

12 Oct 2025 15:04 PM

 IST

ஜெய்ப்பூர், அக்டோபர் 12 : ராஜஸ்தானில் (Rajasthan) பெண் ஒருவர் தனது 4 பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமலே இருந்த நிலையில், அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், 4 பிள்ளைகளுடன் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட பெண்

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண் கிரண். இவருக்கு திருமணமாகி 18 வயது சுமித், 13 வயது சினேகா, 4 வயது ஆயுஷ் மற்றும் 3 வயது ஆவேஷ் என மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த அந்த பெண், பிள்ளைகளுடன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க தீரா ஆசை.. 2 கொலைகளில் முடிந்தது எப்படி?

வீட்டை விட்டு வெளியே வராத குடும்பம்

கிரண் தனது பிள்ளைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரும் அவரது பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். அவர்களது வீடு பூட்டியே கிடந்துள்ளது. அதுமட்டுமன்றி, வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீச தொடங்கியுள்ளது. இது குறித்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : திருமணமான 4 மாதம்.. மனைவியை கொன்ற கணவன்.. படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்

பிள்ளைகளுடன் சடலமாக கிடந்த கிரண்

தகவலின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது கிரண் மற்றும் அவரது குழந்தைகள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் 5 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, கிரண் மற்றும் அவரது குழந்தைகள் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.

கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், கிரண் கடுமையான நிதி சவால்களை சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.