பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு இந்தியாவின் முதல் கிராமம் எழுதிய உருக்கமான கடிதம்!
Letter to PM Narendra Modi on His Birthday | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், இந்தியாவின் முதல் கிராமத்தில் இருந்து அவருக்கு உருக்கமான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
மானா, செப்டம்பர் 17 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை (75th Birthday) கொண்டாடுகிறார். இன்றைய தினம் அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முதல் கிராமத்தில் இருந்து பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி உருக்கமான கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் கிராமத்தில் இருந்து பிரதமருக்கு வந்த உருக்கமான கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இன்றைய தினம் பிரதமர் மோடியின் பிறந்த நாள் மட்டுமன்றி, எங்கள் கிராமத்தின் பயணத்தை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு சிறந்த நாளாகும். இந்தியாவின் கடைசி கிராமம் என்பதில் இருந்து இந்தியாவின் முதல் கிராமம் என்ற அந்தசஸ்தை பெற்ற பயணத்தை நினைவு கூறும் நாள் ஆகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நான் மானாவில் பிறந்து வளர்ந்தேன். எங்கள் கிராமத்தின் நுழைவு வாயிலில் இருந்த இந்தியாவின் கடைசி கிராமம் என்ற பலகையை பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் ஏதோ கடினமான உணர்வை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : மணிப்பூரில் வன்முறையை கைவிட வேண்டும்.. வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும் – பிரதமர் மோடி
அது நாங்கள் நாட்டில் ஒரு மூலையில் தள்ளப்பட்டது போன்ற உணர்வை கொடுக்கும். நாங்கள் எல்லையில் இருந்து நாட்டை பாதுகாத்தாலும் நாங்கள் கடைசியாக நடத்தப்படுவது மிகுந்த மன வேதனையை கொடுக்கும். ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது அனைத்தும் மாறியது. அக்டோபர் 21, 2022 எப்போதும் எங்களது நினைவில் நீங்கா இடம் பிடித்திருக்கும். எல்லையில் இருக்கும் எந்த கிராமும் நாட்டின் முதல் கிராமம் என்று பிரதர் கூறியபோது எங்களது கண்களில் கண்ணீர் ததும்பியது. பல ஆண்டுகள் எங்களது மனதில் இருந்த பாரம் ஒரே ஒரு வார்த்தையில் காணாமல் போனது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை.. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
ஏப்ரல் 2023-ல் எங்களது ஊரின் பலகை இந்தியாவின் முதல் கிராமம் என மாற்றப்பட்டது. எங்களது பல நாள் கனவு நனவாகியது. கடந்த 10 ஆண்டுகளில் எங்களது கிராமம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. மானா கிராமத்தின் சார்பாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிரதமர் மோடிக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை மானா கிராமத்தின் தலைவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.