ஆந்திராவில் மிகப்பெரிய எரிவாயு கசிவு – தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறிய கிராமம் – அதிர்ச்சி சம்பவம்

Gas Leak Incident: ஆந்திரா மாநிலம் கோனசீமா பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழாயில் இருந்து மிகப்பெரிய அளவில் எரிவாயு கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கிராமமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ஆந்திராவில் மிகப்பெரிய எரிவாயு கசிவு - தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறிய கிராமம் - அதிர்ச்சி சம்பவம்

மிகப்பெரிய எரிவாயு கசிவு

Published: 

05 Jan 2026 17:58 PM

 IST

ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh) மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ONGC) குழாயில் இருந்து ஏற்பட்ட மிகப்பெரிய எரிவாயு கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலிகிபுரம் மண்டலத்தில் உள்ள இருசமண்டா அருகே ஏற்பட்ட எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து காரணமாக முழு கிராமமும் புகை மண்டலமாக மாறியுள்ளது. முன்னெச்சரிக்கையாக, அதிகாரிகள் அந்த கிராமத்தில் வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஒன்ஜிசி  குழாயில் இருந்து ஏற்பட்ட மிகப்பெரிய எரிவாயு கசிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலிகிபுரம் மண்டலத்தில் உள்ள இருசமண்டா அருகே ஏற்பட்ட மிகப்பெரிய எரிவாயு கசிவு, அருகிலுள்ள கிராமம் முழுவதையும் புகை மண்டலத்தில் மூழ்கடித்துள்ளது. தீ மளமளவென பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் ஒஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குழாயில் இருந்து ஏற்பட்ட மிகப்பெரிய எரிவாயு கசிவு காரணமாக கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர். இங்கு மீண்டும் மீண்டும் எரிவாயு கசிவு ஏற்படுவது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் மக்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : புதையலுக்கு ஆசைப்பட்டு 1 வயது குழந்தையை பலி கொடுக்க முயற்சி.. பெங்களூரில் பகீர் சம்பவம்!

ஒன்ஜிசி வெளியிட்ட அறிக்கை

 

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓஎன்ஜிசி கிணற்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவம் குறித்து, ஒன்ஜிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.  இந்த கிணறு, மனித வசிப்பிடங்கள் இல்லாத தொலைதூர பகுதியில் அமைந்துள்ளதாகவும், சுமார் 500 முதல் 600 மீட்டர் சுற்றளவில் எந்த குடியிருப்புகளும் இல்லை என்றும் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிணற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அவசியம் ஏற்பட்டால் கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தேவையான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : இந்தூரில் மாசடைந்த குடிநீர்.. 1400க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. 4 பேர் உயிரிழப்பு.. என்ன நடக்கிறது?

எரிவாயு விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாரித்தார். நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மறுபுறம், எரிவாயு கசிவைத் தொடர்ந்து சுற்றியுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மாசடைந்த குடிநீர்... 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை பிரிவில் 32 பேர்
மனித தலையீடு இல்லாமல் தானாக இயங்கும் டிரோன்கள்... துருக்கி உலக சாதனை
புத்தாண்டு அன்று குடும்பத்துக்காக உழைத்த டெலிவரி ஊழியர் - வாடிக்கையாளரின் செயலால் நெகிழ்ச்சி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மட்டும் இல்லையா?