காதலுக்கு நோ சொன்ன பெண்… காருடன் ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற நபர்.. அதிர்ச்சி பின்னணி!

Karnataka Murder : கர்நாடகாவில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால், பெண்ணை ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரியில் காரை ஓட்டிச் சென்று, பெண்ணை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், அந்த நபர் தப்பித்து சென்றிருக்கிறார். இதனை அடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காதலுக்கு நோ சொன்ன பெண்... காருடன் ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற நபர்.. அதிர்ச்சி பின்னணி!

கொலை செய்யப்பட்ட பெண்

Updated On: 

21 Aug 2025 12:48 PM

26691கர்நாடகா, ஆகஸ்ட் 21 : கர்நாடகாவில் 32 வயதான பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலை நிராகரித்ததால், ஒருவர் அவரை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. நாட்டில் பெண்கள், சிறுமிகள் எதிராக தொடர்ந்து கொலை, வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சந்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரவி.  இவர் மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. ஸ்வேதா தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் சந்தித்துள்ளனர். அப்போது முதல் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.  கடந்த சில மாதங்களாக ரவி, ஸ்வேதாவை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், இதற்கு ஸ்வேதா மறுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மனைவி பிரிந்து வருவதாகவும் அவர் ஸ்வேதாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனாலும், பெண் ஸ்வேதா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

Also Read : சிறை நட்பு.. பக்கா ஸ்கெட்ச்.. அர்ச்சகர் வீட்டில் திருடிய 8 பேர் கைது!

பெண்ணை கொடூரமாக கொன்ற நபர்

தனக்கு காதலிக்க விருப்பமில்லை எனவும் நேரடியாக கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால், ரவி ஆத்திரமடைந்து, ஸ்வேதாவை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதனால், தனியாக பேச வேண்டும் என ஸ்வேதாவை அழைத்துள்ளார். அதன்படி, தனது காரில் ஸ்வேதாவை சந்தனஹள்ளி ஏரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு காருடன் ஏரிக்குள் ரவி சென்றிருக்கிறார். அதன்பிறகு, ரவி ஏரியில் தப்பித்து வெளியே வந்திருக்கிறார். ஆனால், ஸ்வேதா நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதனை அறிந்த போலீசார், உடனே ஸ்வேதாவின் உடலை மீட்டுள்ளனர். அப்போது, ஸ்வேதா உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : 10ஆம் வகுப்பு மாணவனை கொன்ற 8ம் வகுப்பு மாணவன்.. சிக்க வைத்த ஸ்க்ரீன்ஷாட்!

மேலும், ரவியையும் பிடித்துள்ளனர். விசாரணையின் போது, ​​கார் தற்செயலாக ஏரியில் விழுந்ததாகவும், தான் நீந்தி பாதுகாப்பாக ஓடிவிட்டதாகவும், ஆனால் ஸ்வேதாவால் முடியவில்லை என்றும் ரவி போலீசாரிடம் கூறினார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ஸ்வேதா கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஸ்வேதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கைப் பதிவு செய்தனர்.