தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!

Indigo Flight Tail Scrapes Runway | மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று தரை இறங்க முயன்றுள்ளது. அப்போது கனமழை பெய்த நிலையில், விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளான நிலையில், விமானம் பத்திரமாக தரை இறங்கியது.

தரை இறங்கும்போது இண்டிகோ விமானத்தில் பரபரப்பு.. அலறிய பயணிகள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

17 Aug 2025 08:42 AM

மும்பை, ஆகஸ்ட் 17 : பாங்காக்கில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ விமானம் (Indigo Flight) ஒன்று தரை இறங்கும்போது அதன் வால் தரையில் உரசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரை இறங்கும்போது மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் விமானி விமானத்தை கீழே இறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். ஒருவழியாக விமானத்தை தரையிறக்க அவர் முயற்சி செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தின் வால் தரையில் உரசியதால் பயணிகள் அச்சமடைந்த நிலையில், எந்த வித அசம்பாதிவமும் ஏற்படாமல் பயணிகள் தரை இறக்கப்பட்டனர்.

தரை இறங்கும்போது தரையில் உரசிய விமானத்தின் வால்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. ஏ 321 ரகத்தை சேர்ந்த இந்த விமானம்  தரை இறங்குவதற்காக தயாராக இருந்துள்ளது. ஆனால், அந்த நேரம் கனமழை பெய்த நிலையில், விமானத்தை தரை இறக்குவதில் சிக்கல் நீடித்துள்ளது. ஒரு வழியாக விமானி, விமானத்தை தரை இறக்க முயன்ற போது விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியுள்ளது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர்.  இதனை அடுத்து விமானத்தை தரை இறக்க வந்த விமானி, விமானத்தை மீண்டும் டேக் ஆஃப் செய்து வானில் பறக்க தொடங்கியுள்ளார். பின்னர் வானிலை சற்று சீரானதும், விமானத்தை பத்திரமாக கீழே இறக்கியுள்ளார். இதனால் பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 6 பேர் பலியான சோகம்!

விமானம் தரை உரசியது குறித்து விளக்கம் அளித்த இண்டிகோ

இண்டிகோ விமானம் தரை இறங்கும்போது அதன் வால் தரையில் உரசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ321 விமானம் தரை இறங்கும்போது ஓடுபாதையில் அதன் வால் பகுதி உரசியது. இதையடுத்து மறு முயற்சியில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் விமான பணி குழுவின் பாதுகாப்பிற்கே இண்டிகோ நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு.. 46 பேர் பலி.. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்!

விமானம் தரை இறங்கும்போது அதன் வால் தரையில் உரசிய நிலையில், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.