New COVID Variants India: இந்தியாவில் மீண்டும் படை எடுக்கிறதா கொரோனா..? 2 புதிய வகை தொற்று கண்டுபிடிப்பு..!
COVID-19 Surge India: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 257 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் அதிக பாதிப்பு. NB.1.8.1 மற்றும் LF.7 என இரண்டு புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் NB.1.8.1 மற்றும் குஜராத்தில் LF.7 பாதிப்புகள் அதிகம். உலக சுகாதார நிறுவனம் இதுவரை அபாயகரமானவை என வகைப்படுத்தவில்லை.

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
டெல்லி, மே 26: கொரோனா வைரஸ் (Corona Virus) குறித்த உலகளாவிய அச்சத்திற்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் புதிய உயர்வை கண்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 257 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி (Delhi) போன்ற மாநிலங்களில் அதிக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது கூறப்படுகிறது. சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 2 புதிய வகை தொற்றுகள் (2 New Variants Covid Cases) கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2 புதிய வகை தொற்று கண்டுபிடிப்பு:
இந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), NB.1.8.1 மற்றும் LF.7 என இரண்டு வகைகளின் அடிப்படையில் பாதிப்புகளை வகைப்படுத்தியுள்ளது. INSACOG தரவுகளின்படி, புதிதாக உருவாகி வரும் கொரோனா தொற்றின் NB.1.8.1 இன் பாதிப்பு ஒன்று தமிழ்நாட்டில் கடந்த வாரம் பதிவாகியுள்ளது. அதேபோல், குஜராத்தில் அதிகபட்சமாக 4 LF.7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் குறித்த உலகளாவிய அச்சத்திற்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் புதிய உயர்வை கண்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 257 கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் அதிக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது கூறப்படுகிறது. சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 2 புதிய வகை தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2 புதிய வகை தொற்று கண்டுபிடிப்பு:
இந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), NB.1.8.1 மற்றும் LF.7 என இரண்டு வகைகளின் அடிப்படையில் பாதிப்புகளை வகைப்படுத்தியுள்ளது. INSACOG தரவுகளின்படி, புதிதாக உருவாகி வரும் கொரோனா தொற்றின் NB.1.8.1 இன் பாதிப்பு ஒன்று தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது. அதேபோல், குஜராத்தில் அதிகபட்சமாக 4 LF.7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இந்த கொரோனா பாதிப்புகள் கண்காணிப்பில் உள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதுவரை அபாயகரமானவை என்று வரையறுக்கப்படவில்லை.
அதேநேரத்தில், இந்த புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகளால், இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தானேவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும், பெங்களூருவை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ள நிலையில், 2025ம் ஆண்டு மட்டும் இதுவரை மொத்தமாக 5 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு:
பெங்களூருவில் கொரோனா தொற்றால் 9 மாத குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார். இந்தியாவில் இதுவரை மொத்தம் 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மகாராஷ்டிராவில் இதுவரை 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உருமாறிய வைரஸ்:
JN.1 என்ற வகை உருமாறிய வைரஸ் இந்தியாவில் முதன்மையாக இருந்தாலும், NB.1.8.1 என்ற புதிய துணை வைரஸும், LF.7 வைரஸ் வகையில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இவை அதிக பரவுதல் திறன் கொண்டவை என்றும், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.