பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!

India-Pakistan Border Clash: ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஆந்திர வீரர் முரளி நாயக் வீரமரணமடைந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தியது. பாகிஸ்தானின் டிரோன், ஏவுகணை தாக்குதல்களை இந்தியா S-400 அமைப்பால் முறியடித்தது. முரளி நாயக்கின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல் தெரிவித்தார். இந்த மோதல் தொடர்ந்து உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!

வீர மரணம் அடைந்த முரளி நாயக்

Updated On: 

09 May 2025 16:59 PM

ஜம்மு காஷ்மீர் எல்லையில் (Jammu Kashmir Border) பாகிஸ்தானுடன் (Pakistan) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் (Army soldier Murali Naik) வீர மரணம் அடைந்தார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் மோதல் மேலும் தீவிரமடைந்த நிலையில், பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டது. இந்தியா அதனை S-400 பாதுகாப்பு அமைப்பின் மூலம் முறியடித்தது. முரளி நாயக்கின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் கீழ் தாக்கி அழித்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீர மரணம் அடைந்த முரளி நாயக்

இந்த மோதலின் போது, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். ஆந்திரப் பிரதேசம் சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்த இவர், எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார். அவரின் உடல் 2025 மே 10 ஆம் தேதி நாளை சொந்த ஊரான கல்லிதண்டா கிராமத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த மேலும் இருவர் பணியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர முதலமைச்சரின் இரங்கல்

முரளி நாயக்கின் உயிரிழப்பை அடுத்து, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். “முரளி நாயக்கின் தியாகம் நாட்டின் பாதுகாப்புக்கு நினைவாக இருக்கும். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

ஆந்திர முதலமைச்சரின் இரங்கல்

இந்தியாவின் பதிலடி தாக்குதல்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் விமான மற்றும் ஏவுகணை மூலம் பல இடங்களில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதில் பாகிஸ்தான் கடும் நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

S-400 பாதுகாப்பு அமைப்பின் தாக்கம்

பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் இந்தியா, அதிநவீன S-400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பாகிஸ்தானின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை முறியடித்தது. கடந்த இரவு மட்டும் பாகிஸ்தான் 15 இடங்களை குறிவைத்து தாக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் தொடரும் அத்துமீறல்

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வெற்றிகரமாக தடுக்கின்றனர். கட்ரா, மாதா வைஷ்ணோ தேவி கோவில் மற்றும் காந்திநகர் பகுதிகளையும் பாகிஸ்தான் டிரோன் மூலம் குறிவைத்தது. ஆனால் இந்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த மோதல்கள் தொடர்ந்து எழும் சூழ்நிலையில், உலக நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இந்தியா அமைதியை விரும்பினாலும், நாட்டின் பாதுகாப்புக்காக தேவையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.