பஞ்சாபில் நடுவானிலேயே ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்!

India Pakistan Tensions : இந்தியா பாகிஸ்தான் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், 2025 மே 10ஆம் தேதியான இன்று காலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், அதனை இந்திய ராணுவம் நடுவானிலையே சுட்டு வீழ்த்தியது. இந்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது.

பஞ்சாபில் நடுவானிலேயே ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்!

ட்ரோன் தாக்குதல்

Updated On: 

10 May 2025 09:53 AM

பஞ்சாப், மே 10: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கு கடந்த மூன்று நாட்களாக தொடர் தாக்குதல், பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், 2025 மே 9ஆம் தேதி இரவு பஞ்சாப் மாநிலம் அமித்ரசரஸில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதலில் நடுவானிலேயே முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் முழுவதும் கிட்டத்தட்ட 36 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.

நடுவானிலேயே ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா

ஆனால், எதுவும் எல்லைக்குள் நுழையவில்லை. ஆனால், பஞ்சாபில் ஒரு ட்ரோன் வீடுகள் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயம் அடைந்தனர். மேலும், இந்தியாவும் இதற்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலில் 3 விமானப்படை தளங்களை அழித்துள்ளதுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் முக்கிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த ட்ரோன் தாக்குதலை எப்படி இந்திய முறியடித்தது குறித்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய ராணுவம், “நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பல எதிரி ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது. ஆளில்லா விமானங்கள் உடனடியாக நமது வான் பாதுகாப்புப் பிரிவுகளால் ஈடுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது.

வீடியோ வெளியிட்ட ராணுவம்


இந்திய ராணுவம் பாகிஸ்தானின் திட்டங்களை முறியடிக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோவில் பாகிஸ்தான் ட்ரோனை எப்படி இந்திய வீழ்த்தியது என்பது காட்டப்படுகிறது.  இப்படி  இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கு மோதல் போக்கு நிலவுகிறது. இதனை உலக நாடுகளுக்கு உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.  இருநாடுகளுக்கு  பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.