India Pakistan Ceasefire Violation: மீண்டும் ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்..! பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர்!
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்தார். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், மே 10: கடந்த 2 நாட்களுக்கு மேலாக இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு (India Pakistan Ceasefire) இடையே நிலவி வந்த தாக்குதல்கள் இன்று அதாவது 2025 மே 10ம் தேதி நிறுத்தப்படுவதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்கு பிறகு, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவில் எல்லையோர பகுதிகளில் ட்ரோன்களை கொண்டு தாக்குதல்களை நடத்த முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா (Jammu and Kashmir Chief Minister Omar Abdullah), தங்களது பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்:
What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு என்ன ஆயிற்று..? ஸ்ரீநகர் முழுவதும் மீண்டும் வெடிச்சத்தங்கள் கேட்கிறது. இது போர் நிறுத்தம் அல்ல, ஸ்ரீநகரில் மத்திய வான் பாதுகாப்பு பிரிவு துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
கிடைத்த தகவலின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, ஆர்எஸ் புரா செக்டார், மெந்தர், சுந்தர்பானி, அர்னியா, உதம்பூர், அக்னூர், நவ்ஷேரா, பூஞ்ச் ரஜோரி மற்றும் கதுவா ஆகிய இடங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது . இதற்கிடையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் பல இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மீண்டும் தாக்குதலை தொடங்கிய இந்திய இராணுவம்:
India-Pak War: They declared Cease fire but still Pakistan is doing drone attack… 😭
What India, what have you done? Clear blackout In Jammu #Ceasefire #TerroristPakArmy#India #Pakistan #IndiaPakistanConflict #IndiaPakistanWar2025 #IndiaPakistanWar pic.twitter.com/cywkSAC7ds
— Jumedeen Khan (@jumedeen_khan) May 10, 2025
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய துப்பாக்கி சூட்டுக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தநிலையில், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஸ்ரீநகரில் முழுமையான மின்தடை போடப்பட்டுள்ளது. அதேபோல், கார்கில் பகுதிகளிலும் மின் தடை போடப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, சரியான ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் 8.50 மணிக்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், துப்பாக்கி சூடு தொடங்கிய சிறிது நேரத்தில் பின்னர் ட்ரோன்கள் வானத்தில் பறக்க தொடங்கிய கூறப்படுகிறது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் 10 பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன, அவற்றை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இதனுடன், ஸ்ரீநகரில் ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் பார்மர், ஸ்ரீநகர், பர்னாலா, முக்த்சர் ஆகிய பகுதிகளில் மொத்த மின்தடை உள்ளது. பார்மரில் பல ட்ரோன்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காணப்பட்டுள்ளன.