குடும்ப தகராறு.. உபியில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!

Husband Bite Wife's Nose In UP | உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குடும்ப தகராறு.. உபியில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!

பாதிக்கப்பட்ட பெண்

Updated On: 

03 Apr 2026 14:57 PM

 IST

லக்னோ, ஏப்ரம் 03 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், ஹமிர்பூர் மாவட்டம், பிர்ஹட் கிராமத்தை சேர்ந்தவர் பொலொ கான் என்ற இளைஞர். இவருக்கு திருமணமாகி பனா என்ற மனைவி உள்ளார். இதனிடையே அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில், பொலொ கான் தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கணவன், தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன் – அதிர்ச்சி சம்பவம்

திருமணத்திற்கு பிறகு பொலொ கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலொ கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏப்ரல் 01, 2026 அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அது பெரிய வாக்குவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பொலொ கான், தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.

இதையும் படிங்க : நாளை தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனைவி

பொலொ கான், தனது மனைவின் மூக்கை கடித்து துப்பியது மட்டுமன்றி கழுத்தை கடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரது மனைவி பனாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளார் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும்  படிங்க : மது குடித்துவிட்டு, ஆபாச படங்களை பார்த்து கணவனை தொல்லை செய்த மனைவி.. பகீர் சம்பவம்!

குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..