குவைத்தில் இருந்து ஐதராபாத் வர இருந்த இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு சம்பவம்!
Human Bomb Threat To Indigo Flight | இன்று (டிசம்பர் 02, 2025) குவைத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துக்கொண்டு இருந்த இண்டிகோ விமானத்திற்கு இமெயில் மூலம் மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
ஐதராபாத், டிசம்பர் 02 : குவைத்தில் (Kuwait) இருந்து ஐதராபாத் (Hyderabad) நோக்கி வந்துக்கொண்டு இருந்த இண்டிகோ (Indigo) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஐதராபாத் வர இருந்த அந்த விமானம், மும்பைக்கு (Mumbai) திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குவைத்தில் இருந்து ஐதராபாத் வர இருந்த விமானத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐதராபாத் நோக்கி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இன்று (டிசம்பர் 02, 2025) காலை குவைத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று வந்துக்கொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த விமானத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்க உள்ளதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த இ மெயில் மிரட்டல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத்துக்கு செல்ல வேண்டியதாக இருந்த அந்த விமானம், மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்த ஓய்வு பெற்ற காவலர்.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
தனிமையான பகுதியில் நடைபெறும் ஆய்வு
அந்த விமானம் மும்பையில் தரையிறங்கிய நிலையில், அதனை தனியான பகுதிக்கு எடுத்துச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மிரட்டலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா, விமானத்தில் கோளாறு எதும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானம் எந்த வித ஆபத்தும் இன்றி தரையிறக்கப்பட்ட நிலையில், அதில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் உள்ளது.
இதையும் படிங்க : வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை.. ஷாக் சம்பவம்!
விளக்கம் அளிக்காத இண்டிகோ நிறுவனம்
குவைத்தில் இருந்து ஐதராபாத் வர இருந்த இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இண்டிகோ நிறுவனம் எந்த வித விளக்கமும் அளிக்காமல் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விரிவாக அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்ப்டுகிற்து குறிப்பிடத்தக்கது.