அம்பேத்கரின் கனவை பிரதிபலிக்கும் பிரதமர் மோடியின் ஆட்சி – அரசியல் ஆய்வாளர்கள் பாராட்டு
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு , அவரது சிந்தனைகளும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் கொள்கைகளும் எப்படி ஒரே பாதையில் பயணிக்கின்றன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். அம்பேத்கர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவம் போன்ற அடிப்படைக் கொள்கைகள், இன்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டிகளாக உள்ளன.

அம்பேத்கரின் கனவை பிரதிபலிக்கும் பிரதமர் மோடியின் ஆட்சி
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் (B.R.Ambedkar) நினைவு தினத்தை முன்னிட்டு , அவரது சிந்தனைகளும், பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) ஆட்சிக் கொள்கைகளும் எப்படி ஒரே பாதையில் பயணிக்கின்றன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். அம்பேத்கர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவம் போன்ற அடிப்படைக் கொள்கைகள், இன்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டிகளாக உள்ளன. அதேபோன்று, அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் கோட்பாடு அம்பேத்கரின் ஜனநாயக பார்வையை மேம்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரதமர் மோடியின் கூற்றான, கடைசி 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறினர் என்பதும் அரசியலமைப்பு உரிமைகள் மக்களின் வாழ்க்கையை உண்மையாக மேம்படுத்த வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அம்பேத்கர் கொள்கைகளை செயல்படுத்திய மோடி
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சமூகநீதித் துறையின் கீழ் 100க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வி, இருப்பிடடம், சுகாதாரம் பொருளாதார முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள், அம்பேத்கர் பவனின் அடிக்கல் நாட்டியது, அம்பேத்கரின் சிலைகளை அமைத்தல், பொதுமக்களுக்கு அரசியலமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த சம்விதான் யாத்ரா தொடங்கியது, கடந்த 2007 ஆம் ஆண்டு அம்பேத்கர் ஜெயந்தியின் போது ஸ்வச் குஜராத் திட்டம் தொடங்கியது என இவை அனைத்தும் அம்பேத்கரின் கனவை செயல்வடிவம் கொடுத்த முயற்சிகளாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : புதினுக்கு வழங்கப்பட்ட இந்திய உணவுகள்…கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறது!
சர்வதேச அரங்கில் அம்பேத்கரின் தத்துவத்தை உயர்த்திய பிரதமர்
பிரதமராக பதவி ஏற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் கீழ், அம்பேத்கரின் ஐந்து முக்கிய தலங்களை நினைவு பயணக் களமாக வடிவமைத்தார். மேலும், லண்டன் மற்றும் டெல்லியில் அம்பேத்கர் நினைவு மையங்கள் அமைக்கப்பட்டது. ஜன்பத்தில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு தினம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அம்பேத்கரின் சிந்தனைகள் உலக அளவில் பரவியதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : “கூடங்குளம் அனுமின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம்”.. ரஷ்ய அதிபர் புதின் உறுதி!!
அம்பேத்கரை ஒரு பெரிய பொருளாதார நிபுணராக முன்னிறுத்தும் மோடி அரசு
கடந்த 2015 ஆம் ஆண்டு தலித் தொழில்முனைவோர் மாநாட்டில், அம்பேத்கரின் பொருளாதார எழுத்துக்கள்
இன்றைய சவால்களுக்கு முக்கிய வழிகாட்டி என மோடி கூறினார். மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்பேத்கர் சோசியல் இன்னோவேஷன் இன்குபேஷன் மிஷன் மூலம் பட்டியலின இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பது, 127 ஆம் அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஓபிசி வகைப்படுத்தலில் மாநிலங்களுக்கு அதிகாரம் மீட்பு, அரசியலமைப்பு பிரிவு 3470 நீக்கம் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கான சம உரிமை, இவை அனைத்தும் அம்பேத்கரின் சமத்துவ இந்தியா என்ற நோக்கத்தை வலுப்படுத்துவதாக கருதப்படுகிறது.