புனே விமான விபத்து.. அஜித்பவாருடன் பலியான 4 பேர்.. மனதை உருக்கும் தகவல்கள்!

Pune Flight Crash Victims | மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் துணை முதலமைச்சர் அஜித்பவார் உடன் பலியானவர்கள் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புனே விமான விபத்து.. அஜித்பவாருடன் பலியான 4 பேர்.. மனதை உருக்கும் தகவல்கள்!

விமான விபத்தில் பலியான 4 பேர்

Published: 

29 Jan 2026 12:03 PM

 IST

மும்பை, ஜனவரி 29 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம், புனே (Pune) அருகே நடந்த விமான விபத்தில் அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித்பவார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் விமானத்தில் பயணம் செய்த விமானி கேப்டன் சுமித் கபூர், பெண் துணை விமானி கேப்டன் சாம்பவி பதக், விமான பணிப்பெண் பிங்கி மாலி மற்றும் மும்பை காவல் பிரிவை சேந்த அஜித்பவாரின் பாதுகாப்பு அதிகாரி விபித் ஜாதவ் ஆகியோரும் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில், இந்த விமான விபத்தில் பலியானவர்கள் குறித்த மனதை உருக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமான கேப்டன் சுமித் கபூர்

டெல்லியை சேர்ந்த இவர் சுமார் 16 ஆயிரத்து 500 மணி நேரத்திற்கும் மேலான விமான ஓட்டிய அனுபம் கொண்டவர். இவர் சிறந்த பயிற்றுவிப்பாளரகவும் திகழ்ந்துள்ளார். இத்தகைய அனுபவம் மிக்க விமானியின் கட்டுப்பாட்டில் இருந்த விமானம் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!

துணை விமானி சாம்பவி பகத்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் ஒரு ராணுவ அதிகாரியின் மகள் ஆவார். இவர் டெல்லியில் உள்ள விமானப்படை பால பாரதி பள்ளியில் பயிற்சி பெற்றவர். 28 வயதான சாம்பவி இந்தியாவின் சிவில் போக்குவரத்து துறையில் சிறந்த எதிர்காலம் கொண்டவராக கருதப்பட்டார். குறைந்த வயதில் அதிக பொறுப்புடன் விமானத்தை இயக்கியவர் என்ற பெருமையை கொண்டிருந்த சாம்பவியின் கனவுகள் விமான விபத்தில் எரிந்து சாம்பலாகியது.

விமான பணிப்பென் பிங்கி மாலி

மும்பையின் ஓர்லி பகுதியை சேர்ந்த பிங்கி, தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக விமான பணிப்பெண் வேலையை தேர்வு செய்தவர். 29 வயதே ஆன அவரின் கனவு தற்போது காற்றோடு கறைந்துவிட்டது.

இதையும் படிங்க : இதுதான் அதிர்ஷ்டம்… உடைந்து நொறுங்கிய மின் கம்பம்.. நூலிழையில் தப்பிய சிறுவன் வீடியோ!

பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ்

மும்பையை அடுத்த தானே பகுதியை சேர்ந்தவர் விதிப். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். அழகிய குடும்பத்தோடு பல கனவுகளோடு இயங்கிக்கொண்டு இருந்த இவரது வாழ்க்கை காற்றில் கறைந்துவிட்டது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..